பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணியர் வராததால் பண்ணவாடி பரிசல்துறை 'வெறிச்'

Added : நவ 13, 2020
Share
Advertisement
மேட்டூர்: சுற்றுலா பயணியர் வராததால், பண்ணவாடி பரிசல்துறை வெறிச்சோடியது. மேட்டூர் அணை, பண்ணவாடி பரிசல் துறையில் இருந்து, மறுகரையான, தர்மபுரி மாவட்டம், நாகமறைக்கு, பயணியர் விசைப்படகு இயக்கப்படுகிறது. இதன்மூலம், தினமும் ஏராளமானோர் பயனடைந்தனர். இதுதவிர பரிசல்துறையை சுற்றிப்பார்க்க, மாநிலம் முழுதும், தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருவர். அவர்கள், அங்குள்ள கடைகளில்

மேட்டூர்: சுற்றுலா பயணியர் வராததால், பண்ணவாடி பரிசல்துறை வெறிச்சோடியது. மேட்டூர் அணை, பண்ணவாடி பரிசல் துறையில் இருந்து, மறுகரையான, தர்மபுரி மாவட்டம், நாகமறைக்கு, பயணியர் விசைப்படகு இயக்கப்படுகிறது. இதன்மூலம், தினமும் ஏராளமானோர் பயனடைந்தனர். இதுதவிர பரிசல்துறையை சுற்றிப்பார்க்க, மாநிலம் முழுதும், தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருவர். அவர்கள், அங்குள்ள கடைகளில் விற்கப்படும் மீன்களை விரும்பி சாப்பிடுவர். அதற்காக, 10க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தற்காலிக கடை நடத்துகின்றனர். ஆனால், கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கால், பண்ணவாடி பரிசல்துறைக்கு சுற்றுலா பயணியர் அரிதாகவே செல்வதால் கடைகள் வெறிச்சோடியுள்ளன. இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: மேட்டூர் அணை பூங்காவுக்கு, சுற்றுலா வருவோரில் பலர், பண்ணவாடி பரிசல்துறைக்கு வருவர். ஆனால், கடந்த மார்ச்சில் மூடப்பட்ட மேட்டூர் அணை பூங்கா, இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், சுற்றுலா பயணியர் பரிசல்துறைக்கு வருவதில்லை. கடந்த மார்ச் முதல், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதால், கடைகளில் போதிய வியாபாரம் இல்லை. தீபாவளி நெருங்கிவிட்டதால், விசைப்படகில் வெளியூர் செல்லும் பயணியர் கூட்டமும் குறைந்துவிட்டது. இதனால், ஒரு வாரமாக பரிசல்துறையே வெறிச்சோடியுள்ளது. அணை பூங்கா திறந்தால் மட்டுமே, எங்கள் கடைகளில், பழையபடி வியாபாரம் நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X