பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி ஊழியர்களுக்கு அக்டோபர் சம்பளம் போடல; சோக தீபாவளியாக மாறியதாக விரக்தி

Added : நவ 13, 2020
Share
Advertisement
சேலம்: சேலம் மாநகராட்சியில், தூய்மை பணியாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, அக்டோபர் மாத சம்பளம் வழங்காததால், தீபாவளி கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.சேலம் மாநகராட்சியில், நிரந்தர தூய்மை பணியாளர் - 1,048 பேர், வருவாய், பொறியியல் பிரிவு, மண்டல அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். மாநகராட்சி வழங்கும் ஓய்வூதியத்தை, வாழ்வாதாரமாக கொண்டும்,

சேலம்: சேலம் மாநகராட்சியில், தூய்மை பணியாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, அக்டோபர் மாத சம்பளம் வழங்காததால், தீபாவளி கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


சேலம் மாநகராட்சியில், நிரந்தர தூய்மை பணியாளர் - 1,048 பேர், வருவாய், பொறியியல் பிரிவு, மண்டல அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். மாநகராட்சி வழங்கும் ஓய்வூதியத்தை, வாழ்வாதாரமாக கொண்டும், பல நூறு குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு சம்பளம் வழங்க, மாதம், 3 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இதற்கு, மாநகராட்சி வரி வசூல் மூலமே சம்பளம் வழங்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கால், பல மாதமாக வரிவசூல் மெத்தனமாக நடந்து வந்த நிலையில், அக்டோபர் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தீபாவளிக்குள் சம்பளம், தீபாவளி முன்பணம், ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என நம்பி வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் சதீஷ் மாற்றலாகி, கிருஷ்ணகிரிக்கு சென்றார். தற்போது, புது கமிஷனராக ரவிச்சந்திரன் பதவியேற்ற போதும், நிதியின்மையால் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள், ஓய்வூதியர்கள் குடும்பத்தினர் சோகம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கொரோனா சூழலில் உயிரை பனயம் வைத்து பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்களுக்கு, தீபாவளியை கொண்டாட சம்பளம் கூட வழங்கப்படவில்லை. இதனால், புத்தாடை உள்ளிட்ட பண்டிகை செலவுக்கு மட்டுமின்றி, அன்றாட குடும்ப செலவுக்கே பணமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும், இது சோக தீபாவளியாக உருவெடுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X