பொது செய்தி

தமிழ்நாடு

கட்டாய இலவச கல்வி மாணவர் சேர்க்கைக்கு 2ம் கட்ட குலுக்கல்

Added : நவ 13, 2020
Share
Advertisement
தர்மபுரி: கட்டாய இலவச கல்வி அட்மிஷனுக்காக, தர்மபுரி மாவட்டத்தில், 154 பள்ளிகளில் காலியாக உள்ள, 1,436 சீட்டுகளை நிரப்பும் வகையில், நேற்று இரண்டாம் கட்ட குலுக்கல் நடந்தது.கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில் அரசின் சார்பில், இலவச மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. பொருளாதாரத்தில் நலிந்த

தர்மபுரி: கட்டாய இலவச கல்வி அட்மிஷனுக்காக, தர்மபுரி மாவட்டத்தில், 154 பள்ளிகளில் காலியாக உள்ள, 1,436 சீட்டுகளை நிரப்பும் வகையில், நேற்று இரண்டாம் கட்ட குலுக்கல் நடந்தது.


கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில் அரசின் சார்பில், இலவச மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான, இந்த திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, தனியார் ஆங்கில பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காக, அக்., 1ல் அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் நடந்தது. அப்போது, 176 பள்ளிகளில், 3,350 சீட்டுகளில், 1,914 இடங்கள் நிரம்பின. மீதமுள்ளவை காலியாக உள்ளது என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக நவ., 12ல் குலுக்கல் நடத்தி தகுதியான குழந்தைகளை சேர்க்கலாம் என, தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, 154 பள்ளிகளில் காலியாக இருந்த, 1,436 சீட்டுகளை நிரப்பும் வகையில் தர்மபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், மொரப்பூர், பாலக்கோடு, அரூர், பென்னாகரம் ஆகிய இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் நேற்று நடந்தது. இதில் பெற்றோர்கள், ஆர்வத்துடன் பங்கேற்றனர். அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆய்வு அலுவலர்களாக இருந்து, குலுக்கலை நடத்தியதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X