ஸ்வீட் ஸ்டால்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்வீட் ஸ்டால்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

Added : நவ 13, 2020
Share
தர்மபுரி: தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, தர்மபுரி நகர் மற்றும் தாலுகாவில் உள்ள ஸ்வீட் ஸ்டால்கள் மற்றும் தற்காலிகமாக இனிப்பு, காரம் தயாரிக்கும் மண்டபங்கள், பேக்கரிகளில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானுசுஜாதா, ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இனிப்பு, காரம் உள்ளிட்டவைகள் தரமான முறையிலும், ஒரு முறை

தர்மபுரி: தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, தர்மபுரி நகர் மற்றும் தாலுகாவில் உள்ள ஸ்வீட் ஸ்டால்கள் மற்றும் தற்காலிகமாக இனிப்பு, காரம் தயாரிக்கும் மண்டபங்கள், பேக்கரிகளில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானுசுஜாதா, ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இனிப்பு, காரம் உள்ளிட்டவைகள் தரமான முறையிலும், ஒரு முறை மட்டும் எண்ணெய், நெய் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறதா என, சோதனை செய்தனர். மேலும், இனிப்பு, காரம் தயாரிக்கும் இடம் மற்றும் பணியாளர்கள் சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளனரா என, ஆய்வு மேற்கொண்டனர். சுகாதாரம் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் இனிப்பு, காரம் தயாரித்த, 10 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X