கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம், எம்.சி., பள்ளி பஞ்சாயத்து மாட்டுஓனி, நாரலப்பள்ளி பஞ்சாயத்து தாசினாவூர், கொல்லூர், மாரேகவுண்டனூர், நலகுண்டலப்பள்ளி மற்றும் தங்காடிக்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், 1 கி.மீ., முதல், 2 கி.மீ., தொலைவு சென்று, ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். இதையடுத்து, இந்த கிராமங்களுக்கு வாகனத்தில் நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடமாடும் ரேஷன் கடையை நேற்று, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., அசோக்குமார் துவக்கி வைத்து, மக்களுக்கு பொருட்களை வழங்கினார். மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் பால்வள தலைவர் தென்னரசு, கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE