அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்ய வசதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்ய வசதி

Added : நவ 13, 2020
Share
கிருஷ்ணகிரி: இணையதளம் மூலம், அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியங்களில் புதிய பதிவு, புதுப்பித்தல் செய்து கொள்ளலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்டு, உறுப்பினர்களாக தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டு

கிருஷ்ணகிரி: இணையதளம் மூலம், அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியங்களில் புதிய பதிவு, புதுப்பித்தல் செய்து கொள்ளலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்டு, உறுப்பினர்களாக தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து ஊனம் மற்றும் விபத்து மரணம் உதவித்தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. எனவே, நலவாரியங்களில் புதிதாக பதிவு செய்யவும், ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளவும், www.tnuwwb.in, என்ற இணையதளம் மூலம் சேவை வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா உட்பட, 16 நல வாரியங்களில் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும், இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 04343 - 231321 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X