பொது செய்தி

தமிழ்நாடு

லாரிகளுக்கு காலாண்டு வரி செலுத்த கால அவகாசம்

Added : நவ 13, 2020
Share
Advertisement
சேலம்: லாரிகளுக்கு, மூன்று காலாண்டு வரி செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா பரவலால், கடந்த பிப்ரவரி முதல் தற்போது வரை, லாரிகளுக்கு லோடு கிடைக்காமல், உரிமையாளர்கள் வருவாய் இழப்பை சந்தித்தனர். கடந்த செப்., 30ல், இரு காலாண்டு வரி(மார்ச், 1 - மே, 30; ஜூன், 1 - ஆக., 31) செலுத்தும் காலம் முடிவுக்கு வந்த நிலையில், மூன்று லட்சம் லாரிகளுக்கு, வரியை செலுத்த முடியாமல்,

சேலம்: லாரிகளுக்கு, மூன்று காலாண்டு வரி செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா பரவலால், கடந்த பிப்ரவரி முதல் தற்போது வரை, லாரிகளுக்கு லோடு கிடைக்காமல், உரிமையாளர்கள் வருவாய் இழப்பை சந்தித்தனர். கடந்த செப்., 30ல், இரு காலாண்டு வரி(மார்ச், 1 - மே, 30; ஜூன், 1 - ஆக., 31) செலுத்தும் காலம் முடிவுக்கு வந்த நிலையில், மூன்று லட்சம் லாரிகளுக்கு, வரியை செலுத்த முடியாமல், உரிமையாளர்கள் தவித்தனர். அக்., 31க்குள், மூன்று காலாண்டு வரியையும் செலுத்தாதபட்சத்தில், 100 சதவீத அபராத தொகையுடன் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, கடந்த அக்., 30ல், 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, ஏப்ரல் - ஜூன், ஜூலை - செப்டம்பர் ஆகிய இரு காலாண்டு வரிகளை அபராதம் இன்றி செலுத்த, நவ., 30 வரையும், அக்டோபர் - டிசம்பர் காலாண்டு வரியை, டிச., 31 வரை செலுத்த, கால நீட்டிப்பு வழங்கி, போக்குவரத்துத்துறை முதன்மை செயலர் ஜவஹர் உத்தரவிட்டுள்ளார். இதனால், லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X