பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளியால் மல்லிகை பூ கிலோ ரூ.1,500 ஆக எகிறியது

Added : நவ 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சேலம்: தீபாவளியால், மல்லிகை பூ விலை, கிலோ, 1500 ரூபாயாக உயர்ந்தது. சேலம், வ.உ.சி., பூ மார்க்கெட்டுக்கு, பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி, ஓமலூர், தாரமங்கலம், வீரபாண்டி, வாழப்பாடி, வீராணம், அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் இருந்து, விவசாயிகள், பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அந்த பூக்கள், சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களுக்கும், பெங்களூருவுக்கும் விற்பனைக்கு

சேலம்: தீபாவளியால், மல்லிகை பூ விலை, கிலோ, 1500 ரூபாயாக உயர்ந்தது. சேலம், வ.உ.சி., பூ மார்க்கெட்டுக்கு, பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி, ஓமலூர், தாரமங்கலம், வீரபாண்டி, வாழப்பாடி, வீராணம், அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் இருந்து, விவசாயிகள், பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அந்த பூக்கள், சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களுக்கும், பெங்களூருவுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. அதே நேரம், தற்போது பெய்து வரும் மழை, இரவில் குளிர் காற்றுடன் பனிப்பொழிவால், பூக்களின் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வரத்தும் சரிந்த நிலையில், தீபாவளி பண்டிகையால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், மார்க்கெட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு, அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதில், மல்லிகை பூ விலை புது உச்சத்தை தொட்டுள்ளது. குண்டுமல்லி கிலோ, 500க்கு விற்றது, 1,200 முதல், 1,500 ரூபாய், சன்னமல்லி, 300க்கு விற்றது, 1,000 ரூபாய், ஜாதி மல்லி, 150க்கு விற்றது, 400 ரூபாயாக உயர்ந்தது. கனகாம்பரம், 400க்கு விற்றது, 600 ரூபாய், காக்கட்டான், 300க்கு விற்றது, 700 ரூபாய், அரளி, 80க்கு விற்றது, 160 ரூபாய், நந்தியாவட்டம், 150க்கு விற்றது, 300 ரூபாய், சம்பங்கி, 80க்கு விற்றது, 140 ரூபாயாக உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-நவ-202012:18:39 IST Report Abuse
ஆப்பு மல்லிகப்பூவை பதுக்கி அநியாய விலைக்கு விக்கிறாங்க. எங்கே இரான், ஆப்கானிஸ்தானிலிருந்து மல்லிகை இறக்குமதி பண்ணி பதுக்குபவர்களை ஒழியுங்கள். தூக்கி உள்ளே வையுங்க. அடுத்து மல்லிகை மசோதாதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X