பொது செய்தி

தமிழ்நாடு

லஞ்ச பட்டியல் யாருக்கு எவ்வளவு? பட்டாசு கடை லைசென்ஸ் பெற்றவர்கள் குமுறல்

Updated : நவ 14, 2020 | Added : நவ 13, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
கோவை : தீபாவளி முன்னிட்டு தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க, அரசுத்துறை அதிகாரிகள் பறிக்கும் லஞ்சம் குறித்த விவரப்பட்டியல் வெளியாகியுள்ளது.ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வியாபாரிகள், தற்காலிக பட்டாசுக் கடை அமைப்பர். இதற்கு உள்ளாட்சி அமைப்பு, தீயணைப்பு, போலீஸ் உள்ளிட்ட துறைகளில் இருந்து தடையின்மை சான்று பெறுவது அவசியம். இந்த சான்றுகளின் அடிப்படையில்,
லஞ்சம், பட்டாசுகடை, லைசென்ஸ், பட்டியல், குமுறல்

கோவை : தீபாவளி முன்னிட்டு தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க, அரசுத்துறை அதிகாரிகள் பறிக்கும் லஞ்சம் குறித்த விவரப்பட்டியல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வியாபாரிகள், தற்காலிக பட்டாசுக் கடை அமைப்பர். இதற்கு உள்ளாட்சி அமைப்பு, தீயணைப்பு, போலீஸ் உள்ளிட்ட துறைகளில் இருந்து தடையின்மை சான்று பெறுவது அவசியம். இந்த சான்றுகளின் அடிப்படையில், வருவாய்த்துறையினர் பட்டாசுக்கடை உரிமம் வழங்குகின்றனர்.இந்த நடைமுறையில், அதிகப்படியான லஞ்சம் புழங்குவதை தடுக்க, அரசு 'ஆன்லைன்' முறையை அமல் செய்தது. ஆனாலும், லஞ்சம் முடிவுக்கு வந்தபாடில்லை. லஞ்சம் கொடுத்தால் தான், பட்டாசுக்கடைக்கு உரிமம் கிடைக்கும் என்ற நிலை நீடிக்கிறது.


latest tamil newsகடந்தாண்டு தமிழகத்தில், 5285 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. இந்தாண்டில், 4100 கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமம் பெறுவதற்காக, ஒவ்வொருபட்டாசு கடைக்கும், ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் தர வேண்டி இருந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.இத்துடன், யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் தர வேண்டியிருந்தது என்ற விவரமும் வெளியாகியுள்ளது. தமிழக அரசுத்துறை அலுவலகங்களில் புரையாடிப் போயிருக்கும் லஞ்ச நிலவரத்தை வெளிக்காட்டுவதாக, இந்த பட்டியல் அமைந்துஉள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-நவ-202015:25:47 IST Report Abuse
தமிழ் நாட்டு அறிவாளி கவர்மெண்டு ...காரர்கள்.
Rate this:
Cancel
Ravanan Ramachandran - Chennai,இந்தியா
15-நவ-202012:19:10 IST Report Abuse
Ravanan Ramachandran லஞ்சம் ரத்தத்தோடு ஊறி விட்டது..லஞ்சம் பெறுபவர்களுக்கு எவ்வளவு தண்டனை கொடுத்தாலும் அமைச்சர்களின் சிபாரிசு மூலம தப்பி வெளியே வந்து மீண்டும் மீண்டும் அதையே செய்ய தயங்க மாட்டார்கள். தண்டனை என்பது விரல்களை வெட்டுவது , காதை வெட்டுவது போன்ற தண்டனைகளாக இருக்க சட்டம் மாற்றம் செய்ய பட வேண்டும்..
Rate this:
Cancel
Lt Col M Sundaram (Retd) - Thoothukudi 628 008 ,இந்தியா
14-நவ-202016:07:44 IST Report Abuse
Lt Col M Sundaram (Retd) Why govt is not acting on this? It is shame on the part of Govt. In TN no punishment for corruption.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X