பொது செய்தி

தமிழ்நாடு

வாழைத்தார் விலை சரிவு: விவசாயிகள் கவலை

Added : நவ 13, 2020
Share
Advertisement
கரூர்: வாழைப்பழம் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கரூர், குளித்தலை, லாலாப்பேட்டை, பழைய ஜெயங்கொண்டம், வாங்கல், மோகனூர் போன்ற பல்வேறு பகுதிகளில் வாழை பயிரிடப்படுகிறது. இங்கு, அறுவடை செய்யப்பட்ட வாழை பழம், கரூர் காமராஜர் மார்க்கெட் அருகில் உள்ள மண்டிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு நேற்ற வாழைத்தார் அதிகளவில்

கரூர்: வாழைப்பழம் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கரூர், குளித்தலை, லாலாப்பேட்டை, பழைய ஜெயங்கொண்டம், வாங்கல், மோகனூர் போன்ற பல்வேறு பகுதிகளில் வாழை பயிரிடப்படுகிறது. இங்கு, அறுவடை செய்யப்பட்ட வாழை பழம், கரூர் காமராஜர் மார்க்கெட் அருகில் உள்ள மண்டிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு நேற்ற வாழைத்தார் அதிகளவில் வரத்தாகியது. ஆனால், ஆயுத பூஜை, பொங்கல் போன்ற பண்டிகை போல் இல்லாமல், இந்த பண்டிகைக்கு வாழை பழங்களை குறைவாக மக்கள் வாங்கின்னர். இதனால், வரத்து அதிகம் இருந்தபோதும், தேவை குறைவு என்பதால் விலை வீழ்ச்சியடைந்தது. கடந்த வாரத்தில், 350 ரூபாய்க்கு விற்பனையான கற்பூரவள்ளி தார், நேற்று, 200 ரூபாய்க்கு விற்பனையானது.இதுபோல, ரஸ்தாளி, 450லிருந்து, 350 ரூபாய், பச்சை நாடன், 400லிருந்து, 300 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனர்.

* கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டையில் வாழைக்காய் கமிஷன் மண்டியில் விற்பனை நடந்தது. பூவன்தார், 250, ரஸ்தாளி, 300, கற்பூரவள்ளி, 150 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X