கரூர்: தீபாவளியை முன்னிட்டு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. தமிழகத்தில் நாளைக்கு, தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆயுதபூஜைக்கு பிறகு ஜவுளிக்கடைகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. கரூரில் ஜவுளி நிறுவனங்கள் மற்றும் பலகார கடைகள் நிறைந்த ஜவஹர் பஜார், மேற்கு பிரதட்சணம் சாலை, பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை, செங்குந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில், தீபாவளி பண்டிகைக்கான பொருள்கள் விற்பனை தீவிரமடைந்துள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு நிறுவனங்களில் மிகவும் தாமதமாக போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஜவுளி கடைகளில் புத்தம் புதிய ஆடைகள் வாங்குவதற்கும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குவிந்தனர். பிரபலமான ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இந்த சாலைகளில் மக்கள் நடமாட்டம் மாலை நேரத்தில் அதிகரித்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஜவஹர் பஜார் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இங்குள்ள கடைகளில் கொரோனா பற்றி அச்சம் இல்லாமல் மக்கள் குவிந்து வருவது நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE