பொது செய்தி

தமிழ்நாடு

மாசு கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு பிரசாரம்

Added : நவ 13, 2020
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. குமாரபாளையத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மாவட்ட அலுவலர் செல்வகுமார் தலைமையில், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர், காவேரி நகர்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. குமாரபாளையத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மாவட்ட அலுவலர் செல்வகுமார் தலைமையில், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர், காவேரி நகர் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டவ. இதுகுறித்து, அவர் கூறியதாவது: உச்சநீதிமன்றம் ஆணைப்படி, தமிழகத்தில் காலை, 6:00 முதல், 7:00 மணி வரை, இரவு, 7:00 முதல், 8:00 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும். திறந்த வெளி மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசு வெடிக்கலாம், குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள். பெரியவர்கள் உடனிருந்து கவனிப்பது அவசியம், பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X