பிரிவு சாலையில் அறிவிப்பு பலகை தேவை

Added : நவ 13, 2020
Share
Advertisement
மல்லசமுத்திரம்: பள்ளிப்பட்டி பிரிவு சாலையில், அறிவிப்பு பலகை இல்லாததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மல்லசமுத்திரம் அருகே, பள்ளிப்பட்டியில் தினமும் அதிக எண்ணிக்கையில் இரு சக்கர, கனரக, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் மல்லசமுத்திரம், சூரிய கவுண்டம்பாளையம், பருத்திபள்ளி ஆகிய பகுதிகளுக்கு சாலை பிரிகிறது. ஆனால், பிரிவு சாலை இருப்பதற்கான அடையாளமே

மல்லசமுத்திரம்: பள்ளிப்பட்டி பிரிவு சாலையில், அறிவிப்பு பலகை இல்லாததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மல்லசமுத்திரம் அருகே, பள்ளிப்பட்டியில் தினமும் அதிக எண்ணிக்கையில் இரு சக்கர, கனரக, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் மல்லசமுத்திரம், சூரிய கவுண்டம்பாளையம், பருத்திபள்ளி ஆகிய பகுதிகளுக்கு சாலை பிரிகிறது. ஆனால், பிரிவு சாலை இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் உள்ளது. வாகன ஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதி தெரியாமல் வேறு பகுதிக்கு சென்று நீண்ட தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே, பிரிவு சாலையில் எந்தெந்த சாலை எந்தெந்த பகுதிக்கு செல்கிறது என்பது குறித்த, அறிவிப்பு பலகை வைத்தால், வாகனஓட்டிகள் மிகுந்த பயனடைவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X