பொது செய்தி

இந்தியா

டுவிட்டரை தடை செய் : டுவிட்டரிலேயே டிரெண்டிங்

Updated : நவ 13, 2020 | Added : நவ 13, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : லடாக்கின் லே பகுதியை இந்திய வரைபடத்தில் தவறாக காண்பித்த விவகாரத்தில் டுவிட்டருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதை சுட்டிக்காட்டி இந்தியாவில் டுவிட்டரை தடை செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.சமூகவலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை இந்தியா உட்பட உலகம் முழுக்க உள்ள மக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் லடாக்கின் லே பகுதியை
TwitterBanInIndia, Twitter, Twitterindia,

புதுடில்லி : லடாக்கின் லே பகுதியை இந்திய வரைபடத்தில் தவறாக காண்பித்த விவகாரத்தில் டுவிட்டருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதை சுட்டிக்காட்டி இந்தியாவில் டுவிட்டரை தடை செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.

சமூகவலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை இந்தியா உட்பட உலகம் முழுக்க உள்ள மக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் லடாக்கின் லே பகுதியை ஜம்மு- காஷ்மீருக்கு உட்பட்டது போன்று, வரைபடத்தில் தவறுதலாக காண்பித்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி டுவிட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் லே பகுதி சீனாவில் இருப்பது போன்றும் வரைபடம் வெளியிட்டு இருந்தது. இதற்கு பதிலளித்த டுவிட்டர் நிர்வாகம், தவறை திருத்திக் கொள்வதாக தெரிவித்தது. ஆனால் இன்னமும் சரி செய்யவில்லை. இதையடுத்து, இந்திய இறையாண்மையின் மதிப்பை குறைக்கும் வகையில் டுவிட்டர் செயல்பட்டதாக கூறி டுவிட்டர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து 5 நாட்களுக்குள் டுவிட்டர் பதிலளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.


latest tamil news
மத்திய அரசின் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து டுவிட்டருக்கு எதிராக டுவிட்டரில் பலரும் குரல் கொடுத்தனர். இந்திய வரைபடத்தை தவறாக சுட்டிக்காட்டிய டுவிட்டரை இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும் என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதன்காரணமாக டுவிட்டரில் #TwitterBanInIndia என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. ஒருவேளை இந்தியாவில் டுவிட்டர் தடை செய்யப்பட்டால் என்னவாகும் என்பதையும் பலர் கேலிச்சித்திரங்களாகவும், மீம்ஸ்களாகவும் வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
14-நவ-202006:49:39 IST Report Abuse
NicoleThomson இந்த ட்விட்டர் தளம் மூடப்படவேண்டிய ஒன்று
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-நவ-202003:42:31 IST Report Abuse
J.V. Iyer ஊழல் பெருச்சாளிகளும், தேச விரோதிகளும் இந்த ஊடகங்களை ஆட்சி செய்கிறார்கள். என்ன செய்வது.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
13-நவ-202022:16:42 IST Report Abuse
spr "பொறுப்புத் துறப்பு" என்றொரு சொற்றொடரைத் தவறாகப் பயன்படுத்தி தங்களின் வியாபாரத்திற்கு பயன்படுத்தும் இது போன்ற சமுதாய இணைய தளங்கள், ஊடகங்கள் செய்தித்தாள்களைத் தடை செய்ய வேண்டுவது காலத்தின் கட்டாயம் என்றேனும் ஒரு நாள் ஏதேனுமொரு செய்தியினைக் குறிப்பிட்டுப் பேசுகையில் எவரும் யார் எழுதினாரென்று குறிப்பிடுவதில்லை இன்ன ஊடகத்தில், இணைய தளத்தில் செய்திப் பத்திரிகையில் வெளியான செய்தியென்றே குறிப்பிடுகின்றனர் அந்த வகையில் இவர்கள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களே தானாக சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு நாட்டின் இறையாண்மையைக் கேலிக்குள்ளாக்கும் கருத்துக்களை பதிவிடவோ அல்லது இளைய தலைமுறையினரின் மனதில் வக்கிர உணர்வுகளைத் தூண்டும் என கருதப்படும் செய்திகளை, காட்சிகளை வெளியீடாக கூடாது என்றொரு கட்டுப்பாட்டை இவர்களே கடைபிடித்தால் அரசு இத்தகு இணைய தளங்களைக் கட்டுப்படுத்தவென்று ஒரு அமைப்பை உண்டாக்கத்தேவையில்லை ,அச்சு ஊடகங்களை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா என்னும் சட்டபூர்வ அமைப்பு கண்காணிக்கிறது. தொலைக்காட்சி செய்திகளைக் கண்காணிக்க சுய ஒழுங்காற்று அமைப்பான நியூஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் இருக்கிறது. அட்வர்டைசிங் ஸ்டேன்டர்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா விளம்பரத் துறைக்கான வழிகாட்டு நெறிகளை வகுக்கிறது. திரையரங்குகளிலும், தொலைக்காட்சியிலும் திரையிடும் படங்களுக்கு சென்ட்ரல் போர்ட் ஆஃப் பிலிம் சர்ட்டிபிகேஷன் (திரைப்பட சான்றளிப்புக்கான மத்திய வாரியம்) தணிக்கை செய்து சான்றளிக்கிறது. என்று சொல்லப்பட்டாலும் அவையும் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பது அவற்றில் வெளியாகும் பல செய்திகளை, நிகழ்சசிகளைப் பார்ப்போர் அறிவார்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பண்பாட்டு (கலாச்சாரம் என்பதற்கு சரியான பொருள் மனித செயற்பாட்டுக் கோலங்களையும் அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் கலைகள் என்ன ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்டுமென்ற குறிக்கின்ற ஒரு கருத்து) சீரழிவையே இவை உண்டாக்குகின்றன செய்தித்தாள்களில் "ஸ்கூப்" என்ற பெயரில் உறுதி செய்யப்படாத செய்திகளை அனுமானத்தின் பேரில் வெளியிட்டு மக்களின் மனதில் தவறான கருத்தை விதைப்பது அவை தவறு என்று தெரிந்தால் எந்த ஊடகமும் செய்தித்தாளும் வருத்தம் தெரிவிப்பதுமில்லை கட்டுப்பாடற்ற சுதந்திரம் கணிணிக் கல்வியறிவு குறைபாடுள்ள நாட்டில் மக்கள் அவ்விளைய தளங்களில் குறிப்பிடப்பட்ட கட்டுப்பாடுகளைத் தானே மாற்றியமைத்துக் கொள்ள உதவுவதில்லை அதனால் உண்டாகும் பிரச்சினைகளும் குறைய இக்கட்டுப்பாடுகள் தேவையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X