புதுடில்லி: பிரதமர் மோடி, நாளை (நவ., 14) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் சென்று, ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், எல்லை பகுதிக்கு சென்று, அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார். கடந்த ஆண்டு(2019)ல் காஷ்மீர் மாநிலம் ரஜோரியிலும், 2018 ம் ஆண்டில் உத்தரகண்டிலும், 2017 ல் காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள குரேஸ் பகுதியிலும் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். 2014ல் சியாச்சினிலும், 2015ல் பஞ்சாபிலும், 2016ல் ஹிமாச்சல பிரதேசத்தில் சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினார்.
அந்த வகையில், இந்த ஆண்டு பிரதமர் மோடி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோர் உடன் செல்ல உள்ளதாக தெரிகிறது. டில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வரும் ஜெய்சல்மரில் உள்ள விமானப்படை தளத்திற்கு வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் எல்லைப்பகுதிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், குஜராத்தின், புஜ் பகுதிக்கு மோடி செல்லவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE