எல்லையில் பாக்.ராணுவத்திற்கு இந்தியா பதிலடி: 11 பாக்., வீரர்கள் பலி

Updated : நவ 14, 2020 | Added : நவ 13, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
பாரமுல்லா: காஷ்மீர் எல்லைப்பகுதியில் பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பொது மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் திருப்பி கடுமையாக தாக்கியதில்11 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.காஷ்மீரில், குரேஸ் செக்டார் முதல் உரி செக்டார் வரை, பாகிஸ்தான்
India,Pakisthan,இந்தியா,பாகிஸ்தான், army, ceasefire, securityforce, sacrificed,

பாரமுல்லா: காஷ்மீர் எல்லைப்பகுதியில் பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பொது மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் திருப்பி கடுமையாக தாக்கியதில்11 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில், குரேஸ் செக்டார் முதல் உரி செக்டார் வரை, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. பொது மக்களின் வீடுகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.


3 வீரர்கள் வீரமரணம்


உரியில் உள்ள நம்ப்லா செக்டரில், பாகிஸ்தானின் அத்துமீறலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.ஹஜி பீர்செக்டாரில், பிஎஸ்எப் சப் இன்ஸ்பெக்டர் வீரமரணம் அடைந்தார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். வீரமரணம் அடைந்த வீரர், உத்தர்கண்ட் மாநிலம் ரிஷிகேஷின் கங்கா நகரை சேர்ந்த ராகேஷ் தோவல் என தெரியவந்துள்ளது.


பொது மக்கள் பலி


பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டாரில் உள்ள கமல்கோடே செக்டாரில், 2 பொது மக்களும், ஹாஜி பீர் செக்டாரில் ஒருவரும், பாகிஸ்தானின் அத்துமீறலில் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். பந்திபூரா மாவட்டத்தின் குரேஷ் செக்டாரிலும், குப்வாரா மாவட்டத்தின் கெரான் செக்டாரிலும், பாகிஸ்தானின் அத்துமீறலில் ஈடுபட்டது.


இந்தியா பதிலடி


எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தின் 3 சிறப்பு கமாண்டோக்கள் உள்ளிட்ட11 பாக்., ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.


latest tamil news




ஊடுருவல் முறியடிப்பு


கெரான் செக்டார் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் நடைபெறவிருந்த ஊடுருவல் முயற்சியும் முறியடிக்கப்பட்டது. குப்வாரா மாவட்டத்தில் உள்ள கெரான் செக்டாரில், சந்தேகப்படும்படியான நடமாட்டத்தை இந்திய ராணுவத்தினர் கண்டறிந்தனர். அவர்கள் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த துவங்கினர். இந்திய ராணுவம் நடத்திய பதிலடியில், அவர்கள் அங்கிருந்து பாகிஸ்தானுக்குள் திரும்பி சென்றுவிட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
14-நவ-202019:10:57 IST Report Abuse
mathimandhiri ஆஸ்திரியா உலகிலேயே அமைதியான நாடு..............உள்ளே விட்டார்கள். ஜெர்மனி, பிரான்ஸ் இவர்கள் செய்த பாவமும் அதுவே. அனுபவிக்கிறார்கள்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
14-நவ-202011:32:48 IST Report Abuse
தமிழ்வேள் நயவஞ்சகம், நம்பிக்கை துரோகத்தை தனது வாழ்வின் ஒரு பிரிக்க இயலாத குணமாக கொண்டுள்ள மூர்க்க நாட்டுக்கு அதேபோன்ற வழியில் எதிர்பாராத தருணத்தில் அதாவது அவர்களது புனித நாட்களில் தொடர்ச்சியான தாக்குதல் உயிர் பொருள் சேதம் ஏற்படும் வகையில் தாக்குதல் நடத்தப்படவேண்டும் ...இவர்களுக்கு எதிரான போரில் நியாய தர்மம் பார்க்கவேண்டிய தேவையில்லை ..கொடிய விலங்குக்கு தரும் மதிப்பை தந்தால் போதுமானது ...மிக கடுமையான உயிர்சேதம் ஏற்பட்டால் மட்டுமே இவர்கள் அஞ்சி வால்தனம் செய்யாமல் இருப்பார்கள் .....
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
14-நவ-202009:24:15 IST Report Abuse
Nallavan Nallavan அவங்க தாக்குனாங்க ......... பதிலடி குடுத்துட்டோம் ........ ஓகே ...... இப்படியே எத்தினி நாளுக்கு ???? அடுத்த சர்ஜிக்கல் தாக்குதலுக்கு நேரம் வரலீங்களா ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X