எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

தொடர் தோல்விகளால் காங்., தொண்டர்கள் விரக்தி!

Updated : நவ 14, 2020 | Added : நவ 13, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
மத்தியில், 50 ஆண்டு ஆட்சி செய்த காங்கிரஸ். கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகளில், தலைவர்கள் சுறுசுறுப்பாக ஈடுபடாததால், தொண்டர்கள் பெரும் விரக்தியில் உள்ளனர்.நாட்டில், காங்கிரசுக்கு மாற்றாக ஒரு கட்சியில்லை என, கூறப்பட்டது ஒரு காலம், மத்தியில் தனித்து, 40 ஆண்டுகளும், கூட்டணியாக, 10 ஆண்டுகளும் ஆட்சி செய்த
தொடர் தோல்வி, காங்., தொண்டர்கள், விரக்தி,  தலைவர்,  புலம்பல்

மத்தியில், 50 ஆண்டு ஆட்சி செய்த காங்கிரஸ். கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகளில், தலைவர்கள் சுறுசுறுப்பாக ஈடுபடாததால், தொண்டர்கள் பெரும் விரக்தியில் உள்ளனர்.

நாட்டில், காங்கிரசுக்கு மாற்றாக ஒரு கட்சியில்லை என, கூறப்பட்டது ஒரு காலம், மத்தியில் தனித்து, 40 ஆண்டுகளும், கூட்டணியாக, 10 ஆண்டுகளும் ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ்.கடந்த, 1996ல் நடந்த லோக்சபா தேர்தலில் தோல்வியை காங்கிரஸ் சந்தித்தது. எனினும், எட்டு ஆண்டுகள் இடைவெளிக்கப் பின், மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆனால், 2014 லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு வரலாறு காணாத தோல்வி ஏற்பட்டது. அதன் பின், பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களிலும், தோல்வியை காங்கிரஸ் சந்தித்தது.


சரிவுகாங்கிரசுக்கு ஏற்பட்டு உள்ள சரிவு குறித்து, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: தற்போது பல மாநிலங்களில், காங்கிரஸ் மூன்று அல்லது நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. காங்கிரஸ் தலைமை, கட்சிக்கு புத்துயிர் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கடந்த, 2018 இறுதியில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று, ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. இதனால், கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் மீண்டும் படுதோல்வியை சந்தித்தது. இதன் பின்னும், சரிவிலிருந்து கட்சியை மீட்க, தலைமை பெரிதாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

முழு நேர தலைவரைக் கூட தேர்வு செய்ய முடியாமல், கட்சி முடங்கியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பீஹார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் அடைந்த தோல்வி எதிர்பார்த்தது தான். காங்கிரசை கூட்டணியில் சேர்த்ததால், பீஹாரில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது.ஏனெனில், பீஹார் தேர்தலில், 'மெஹா' கூட்டணியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், 144 இடங்களில் போட்டியிட்டு, 75 இடங்களில் வென்று, மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.


பரிதாபம்


ஆனால், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 19ல் மட்டுமே வென்றுள்ளது; இது, காங்கிரசை விட, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு தான் அதிர்ச்சியை அளித்தது. கடந்த, 2015ல், இதை விட குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டு, 27 தொகுதிகளில் காங்., வென்றது. பீஹாரில், 1989க்கு பின், காங்கிரஸ் ஆட்சி நடக்கவில்லை; அத்துடன் மாநிலத்தில், கட்சியின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது.

பீஹார் மட்டுமின்றி, உத்தர பிரதேசம், டில்லி, ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் என அனைத்திலும், காங்கிரசுக்கு இதே நிலை தான் உள்ளது.பீஹார் தேர்தலில் ராகுலைத் தவிர, கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. ராகுல் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும், 'டுவிட்டரில்' மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கருத்து பதிவிடுவதே போதும் என்ற நிலையில் உள்ளனர்.எந்த மாநிலத்திலும், கட்சியை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம், கட்சி தலைமைக்கு இல்லை. அதனால் தான், பீஹார் மட்டுமின்றி, பல மாநிலங்களிலும், காங்கிரசில் தலைவர்கள் உருவாகவில்லை.


முக்கிய காரணம்


இதற்கு நேர்மாறாக, பா.ஜ.,வில், ஒரு காலத்தில் இரண்டாம் கட்ட தலைவர்களாக இருந்த மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர் தான், இப்போது முக்கிய தலைவர்களாக உள்ளனர். மாநில அளவிலும் செல்வாக்கான தலைவர்கள் பலர் உள்ளனர். ஆனால், காங்கிரஸ், ஒரு குடும்பத்தை மட்டுமே நம்பி செயல்படுகிறது. வாரிசு அரசியலால், காங்கிரஸ் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என, அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தொடர் தோல்விகளால், கட்சி தொண்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர், கட்சியிலிருந்து விலகத் துவங்கியுள்ளனர்.

கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு, மோடிக்கு சவால் விடும் வகையிலான தலைவர்கள், கட்சியில் யாரும் இல்லாதது தான் முக்கிய காரணம்.பழமையான ஒரு கட்சி புத்துயிர் பெற வேண்டும் என்றால், முதலில், முழு நேர தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும். அவர் நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.மாநில அளவில், சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே, 2024 லோக்சபா தேர்தலில், காங்கிரசால் கவுரவத்தையாவது காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால், உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெறுவது கூட, காங்கிரசுக்கு சிரமமாக இருக்கும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


பாடம் கற்க வேண்டும்


காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: பீஹாரில், மெஹா கூட்டணி தோற்றதுக்கு காங்கிரஸ் மீது பழி போடக் கூடாது. காங்கிரஸ் போட்டியிட்ட, 70 தொகுதிகளும், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் வலுவாக உள்ள தொகுதிகள். அதே நேரத்தில், பீஹாரில் கட்சியை வலுப்படுத்த, தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில், பா.ஜ.,விடமிருந்து பாடம் கற்க வேண்டும். ஆறு ஆண்டுகளுக்கு முன், வடகிழக்கு மாநிலங்களில், பா.ஜ.,வே கிடையாது என்ற நிலை தான் இருந்தது. தற்போது, வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும், பா.ஜ., வலுவான கட்சியாக உள்ளது.

திரிபுராவில் இடதுசாரியை தோற்கடித்து, பா.ஜ., ஆட்சியமைக்கும் என, யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இப்போது பா.ஜ., ஆட்சி நடக்கிறது.மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரசுக்கு சவால் விடும் வகையில், பா.ஜ., வலுப்பெற்றுள்ளது. கட்சியை வலுப்படுத்த, பா.ஜ.,விடமிருந்து காங்கிரஸ் பாடம் கற்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர்

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
14-நவ-202015:34:48 IST Report Abuse
RajanRajan ஓ அப்போ இத்தாலி தர்பாரை கலைச்சுடுவாங்களோ... நல்ல காலம் பொறக்குது . நல்ல காலம் பொறக்குது நாட்டுலே...
Rate this:
Cancel
Anand - madurai,இந்தியா
14-நவ-202014:56:00 IST Report Abuse
Anand எங்களுக்கு அரை வெள்ளைக்காரன் தான் வேணும்
Rate this:
Cancel
oliver - karimun,இந்தோனேசியா
14-நவ-202011:30:41 IST Report Abuse
oliver காங்கிரஸ் , கமல்ஹாசன், டிடிவி தினகரன் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கலாம். மைனாரிட்டி மக்களின் ஆதரவு இருக்கிறது. ராகுல் காந்தியும், கமல்ஹாசனும் இணைந்தே தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தால், பீஹாரில் தேஜஸ்ஸ்ரீ யாதவும், ராகுல் காந்தியும் சேர்ந்து சுற்றுப் பயணம் செய்ததுபோல ஒரு எழுச்சியை உண்டாக்க முடியும். காங்கிரஸ் கட்சியையும் புணரமைக்க முடியும். அதற்கு கமல்ஹாசன் தயாராக இருக்கிறார். டிடிவி தினகரனிடம் பேசி அவரை கொண்டுவந்துவிட்டால், தமிழகத்தில் காங்கிரஸ் அசைக்க முடியாத சக்தியாக மாறிவிடும். திமுக முகாமில் காங்கிரஸ் போனால், அதற்கு பதிலாக பாட்டாளி மக்கள் கட்சியை இணைக்கலாம் என பேசப்பட்டுவருகின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X