சிறை குளியல் அறையில் 'கேமரா': மரியம் நவாஸ் பரபரப்பு பேட்டி

Updated : நவ 13, 2020 | Added : நவ 13, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
இஸ்லாமாபாத் : ''நான் அடைக்கப்பட்டு இருந்த சிறையின் குளியல் அறைக்குள், 'கேமரா' பொருத்தப்பட்டு, மிகவும் தரைக்குறைவான செயலில் சிறைத் துறையினர் ஈடுபட்டனர்,'' என, பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மரியம், பரபரப்பு புகார் அளித்துள்ளார்.அண்டை நாடான பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், கடந்த ஆண்டு ஆகஸ்டில், சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில்
சிறை, குளியல் அறை, 'கேமரா', மரியம் நவாஸ், பரபரப்பு, பேட்டி

இஸ்லாமாபாத் : ''நான் அடைக்கப்பட்டு இருந்த சிறையின் குளியல் அறைக்குள், 'கேமரா' பொருத்தப்பட்டு, மிகவும் தரைக்குறைவான செயலில் சிறைத் துறையினர் ஈடுபட்டனர்,'' என, பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மரியம், பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், கடந்த ஆண்டு ஆகஸ்டில், சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, லாகூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அதே ஆண்டு, நவ.,ல், ஜாமினில் அவர் வெளியே வந்தார். அந்த மூன்று மாத காலத்தில், சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகள் குறித்து, சில தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார்.


latest tamil newsமரியம் நவாஸ், நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:சிறைக்கு இரண்டு முறை சென்றுள்ளேன். சிறையில், என்னை ஒரு பெண் என்றுகூட பார்க்காமல், சிறைத் துறையினர் மிகவும் மோசமாக நடத்தினர். அதுகுறித்து இப்போது பேசினால், அதற்கு பொறுப்பான நபர்கள், தங்கள் முகத்தை வெளியில் காட்டவும் தயங்குவர்.என்னை அடைத்து வைத்திருந்த சிறைக்குள், கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. குளியல் அறையில் கேமரா பொருத்தப்பட்டு, மிகவும் தரைக்குறைவான செயலில் ஈடுபட்டனர்.

வீட்டின் கதவை உடைத்து, என் தந்தைக்கு முன், அதிகாரிகள் என்னை கைது செய்தனர்.தனிப்பட்ட தாக்குதல்களையும் என்மீது நடத்தினர். இவற்றை வைத்து பார்த்தால், பாகிஸ்தானில், பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பது உறுதியாகிறது.பாக்., அல்லது எந்த நாட்டைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் சரி, அவள் பலவீனமானவள் அல்ல. அதை அனைவரும் உணர வேண்டும்.அரசியலமைப்பிற்கு உட்பட்டு, ராணுவத்துடன் பேச்சு நடத்த, எங்கள் பாக்., முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சி தயாராக உள்ளது. ஆளும் பாக்., தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி, ஆட்சியில் இருந்து அகற்றப்படவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - கழக பாசறை தொண்டன்,இந்தியா
14-நவ-202015:10:20 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு கூகுள் (யூட்யூப்) செய்யுங்கள் இதை "Pakistan benakab Maryam Nawaz ke bathroom me mila camera, pak media on india latest, National, Web"
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - கழக பாசறை தொண்டன்,இந்தியா
14-நவ-202015:19:42 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுசெய்தியில் எங்கெங்கே கேமராக்கள் இருந்தன என்று சொன்னவர்கள் பின்னர் அதை நீக்கிவிட்டனர் Flush water விழும் இடமும் ஒன்று...
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
14-நவ-202011:38:10 IST Report Abuse
தமிழ்வேள் கண்ணியத்தை பற்றி நவத்வாரங்களும் கிழியும் அளவுக்கு பேசும் மதத்தை தேசியமதமாக கொண்ட நாட்டின் யோக்கியதை இதுதான் ....பெண்கள் அவர்களது வேதபுத்தகத்தை பொறுத்தவரை வணிகத்துக்குரிய பொருட்கள் போன்றவர்களே . எனவே பொருளை பாதுகாக்க கண்காணிப்புக்கு காமிரா பொருத்தியிருப்பார்கள்...எங்கே அழகிய மார்க்கம் சொர்க்க மார்க்கம் என்று சப்பைக்கட்டு காட்டும் பாகிஸ்தானிகளை இன்னும் காணோம் ?
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
14-நவ-202011:29:48 IST Report Abuse
Rasheel பெண் என்பவள் ஒரு போக பொருள். அவள் பிறந்தது அவளை அனுபவிப்பதிற்கே என்று ஒரு மதம் கூறுமானால் அதைவிட கேவலம் எதுவுமே இல்லை. இதனால் தான் இது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X