அமித் ஷா படம் நீக்கம்: 'டுவிட்டர்' விளக்கம்

Updated : நவ 13, 2020 | Added : நவ 13, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின், 'டுவிட்டர்' கணக்கில் இருந்து, புகைப்படம் நீக்கப்பட்டதற்கு, டுவிட்டர் நிர்வாகம், நேற்று விளக்கம் அளித்தது.சமூக வலைதளமான டுவிட்டரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, 2.36 கோடி மக்கள், பின் தொடர்கின்றனர். இந்நிலையில், அவரது டுவிட்டர் கணக்கின் புகைப்படம், நேற்று முன்தினம் திடீரென நீக்கப்பட்டது. மேலும், அந்த இடத்தில்,
அமித்ஷா, படம், நீக்கம்,  'டுவிட்டர்', விளக்கம்

புதுடில்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின், 'டுவிட்டர்' கணக்கில் இருந்து, புகைப்படம் நீக்கப்பட்டதற்கு, டுவிட்டர் நிர்வாகம், நேற்று விளக்கம் அளித்தது.

சமூக வலைதளமான டுவிட்டரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, 2.36 கோடி மக்கள், பின் தொடர்கின்றனர். இந்நிலையில், அவரது டுவிட்டர் கணக்கின் புகைப்படம், நேற்று முன்தினம் திடீரென நீக்கப்பட்டது. மேலும், அந்த இடத்தில், 'பதிப்புரிமை வைத்திருப்பவரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், படம் அகற்றப்பட்டது' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. பின், சிறிது நேரத்தில், அமித் ஷாவின் புகைப்படம், மீண்டும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது.


latest tamil news



எனினும், அந்த படம் நீக்கப்பட்டதன் தெளிவான காரணத்தை, டுவிட்டர் நிர்வாகம், அப்போது வெளியிடவில்லை.
இந்நிலையில், டுவிட்டர் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இதுகுறித்து நேற்று கூறியதாவது:ஒரு கவனக்குறை வான பிழை நடந்துவிட்டது. அதன் காரணமாக, பதிப்புரிமை கொள்கைகளின்கீழ், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் டுவிட்டர் கணக்கில் இருந்து, புகைப்படத்தை தற்காலிகமாக நீக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.இதையடுத்து உடனடியாக, அந்த நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுவிட்டது. இப்போது, அவரது கணக்கு, முழுமையாக செயல்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

லடாக்கின் லே பகுதியை, ஜம்மு - காஷ்மீருடன் இணைத்து, வரைபடத்தை காட்சிபடுத்தியதற்கு, டுவிட்டர் நிர்வாகத்திற்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை, 'நோட்டீஸ்' அனுப்பிய அதே நாளில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் டுவிட்டர் கணக்கில், படம் அகற்றப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
14-நவ-202004:19:50 IST Report Abuse
வெகுளி கவனக்குறைவால் பிழை நடந்தால் அதை சரி செய்வதுடன் மட்டுமின்றி சம்பந்தப்பட்டவரிடம் நடந்த பிழைக்கு மன்னிப்பு கோர வேண்டும்....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-நவ-202003:40:54 IST Report Abuse
J.V. Iyer Twitter, Facebook போன்றவைகளின் ஆளுமை இந்தியாவில் தேசவிரோதிகள் கைக்கு போய்விட்டன. உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
14-நவ-202002:15:08 IST Report Abuse
Madhusoodhana Ramachandran டீவீடெரிக்கு போட்டியாக நாம் ஒன்று தொடங்கி அவன் மூக்கை அறுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X