தேகமென்ற தேரில் வரும் தேவலோக தீபாவளி... இரு விழிகளில் வழிந்தோடுதே சுடர்விடும் தீப ஒளி... இதழ் வரிகளில் எல்லாம் இனிப்பென இனிக்கிறாய், முத்துப் பற்கள் தெரிய மத்தாப்பாய் சிரிக்கிறாய்... அழகை வெடித்து சிதறும் சரவெடியே... சங்கு சக்கரமாய் இளசுகள் இதயம் உன்னையே சுற்றுதடி... என வர்ணிக்க வைக்கும் 'காக்டெய்ல்' ஹீரோயின் ரஷ்மி கோபிநாத் மனம் திறக்கிறார்...
தமிழ் சினிமாவிற்கு புதுமுகமான உங்கள் அறிமுகம்?
நான் பெங்களூரு பொண்ணு. ஒரு கம்பெனியில் எச்.ஆர்., வேலை பார்த்தேன். சின்ன வயதிலேயே நடிக்க ஆர்வம். வீட்ல சம்மதிக்காததால் மாடலிங் பண்ணிட்டு இருந்த போது கன்னட படம் வாய்ப்பு வந்தது. வீட்டில் கஷ்டப்பட்டு சம்மதம் வாங்கி 2 கன்னடம், 1 தெலுங்கு படம் நடித்தேன்.
தமிழில் நடிக்க வாய்ப்பு வந்த பின்னணி என்ன ?
பின்னணி எல்லாம் எதுவும் இல்லை... யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் 'காக்டெய்ல்' படத்தில் ஹீரோயினா நடிக்க படக்குழுவினர் கேட்டாங்க. நானும் ஓ.கே.,ன்னு ஆடிஷன் போயி செலக்ட்டாகி தமிழில் என்ட்ரி கொடுத்தேன்.
என்ன 'காக்டெயல்'; தலைப்பே கிக் கொடுக்குதே?
நீங்க நினைக்குற மாதிரி 'காக்டெய்ல் டிரிங்ஸ்' வைச்சு இந்த தலைப்பு வைக்கலை. படத்தில் ஒரு வெள்ளை கிளி நடிச்சிருக்கு. அது ஆஸி., நாட்டை சேர்ந்த 'காக்டெய்ல்' என்ற இனத்தை சேர்ந்த கிளி. கிளைமாக்ஸில் ஹீரோ குரூப்ஸ்க்கு அந்த கிளி தான் உதவி பண்ணும். அதை வைச்சு தான் இந்த தலைப்பு வைச்சாங்க.
முதல் படமே காமெடி ஹீரோவுக்கு ஜோடியாக.. ?
நடிக்க வந்தாச்சுன்னா என்ன கேரக்டர், யார் கூட நடிக்கிறோம்னு பார்க்க கூடாது. இந்த மாதிரி ஒரு வித்தியாசமான கேரக்டர்கள், கதைகளில் நடித்தால் தான் அனுபவம் கிடைக்கும். இந்த படம் நிறைய விஷயங்களை எனக்கு கற்று கொடுத்திருக்கு.
ஷூட்டிங் ஸ்பாட்டில் யோகி பாபு எப்படி பழகுவார் ?
இந்த படத்தில் நடிக்க வருவதற்கு முன்னாடியே நான் அவரோட ரசிகை. தமிழ் எனக்கு ஒரளவு தான் தெரியும் என்பதால் டயலாக் பேச அவரே சொல்லி கொடுத்தார்.
முதல் படம் தியேட்டரில் ரீலீஸ் ஆகாமல் ஓ.டி.டி.,யில் ?
இந்த படம் கொரோனா வந்த பின்னாடி ரிலீஸ் ஆச்சு. தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் ஓ.டி.டி.,யில் ரிலீஸ் ஆவது வருத்தம்தான். ஆன்லைன்ல நிறைய பேர் பார்த்து பாராட்டினாங்க.
இந்த கொரோனா காலங்கள் எப்படியெல்லாம் போகிறது?
கொரோனா நேரத்தில் மாஸ்க் கட்டாயம் இல்லையா. அதனால் அம்மா வீட்டிலயே மாஸ்க் தைச்சு எங்களுக்கு கொடுத்தாங்க. ரசிகர்கள் அனைவருக்கும் 'கொரோனா பிரீ ஹேப்பி தீபாவளி'...
-ஸ்ரீனி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE