சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இயற்கை உணவுக்கு இயற்கை தட்டு!

Added : நவ 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
பொதுமுடக்க காலத்திலும் கணிசமான விற்பனை கண்டது செயலி மூலம் வரவழைக்கப்படும் உணவுகள் தான். இத்தகைய பார்சல் உணவுகளை போட்டுத் தரும் பொட்டலங்கள், பெட்டிகளுக்கு பல சூழல் கேடு கொண்ட பொருட்கள் பயன்படுகின்றன.இவற்றுக்கு மாற்றாக, அமெரிக்காவிலுள்ள சங்கிலித் தொடர் இயற்கை உணவகமான ஸ்வீட்கிரீன், தன் பேக்கேஜிங் முழுவதையும் மறுசுழற்சி பொருட்களால் ஆனதாகவும், விரைவில் மட்கும்
இயற்கை உணவுக்கு இயற்கை தட்டு!

பொதுமுடக்க காலத்திலும் கணிசமான விற்பனை கண்டது செயலி மூலம் வரவழைக்கப்படும் உணவுகள் தான். இத்தகைய பார்சல் உணவுகளை போட்டுத் தரும் பொட்டலங்கள், பெட்டிகளுக்கு பல சூழல் கேடு கொண்ட பொருட்கள் பயன்படுகின்றன.

இவற்றுக்கு மாற்றாக, அமெரிக்காவிலுள்ள சங்கிலித் தொடர் இயற்கை உணவகமான ஸ்வீட்கிரீன், தன் பேக்கேஜிங் முழுவதையும் மறுசுழற்சி பொருட்களால் ஆனதாகவும், விரைவில் மட்கும் வகையிலும் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறது.

இதில், ஸ்வீட்கிரீன்சுக்கு உதவுவது, பூட்பிரிண்ட்தான். இந்த நிறுவனம், விவசாய கழிவுப் பொருட்கள், காகிதக் குப்பை போன்றவற்றைக் கொண்டு, பிளாஸ்டிக் மற்றும் நச்சில்லா பேக்கேஜிங் பொருட்களை உற்பத்தி செய்து தருகிறது.

ஸ்வீட்கிரீனுக்காக, காகிதக்கூழ் மற்றும் தாவர சக்கைகளைக் கொண்டு, உயர் அழுத்தம் மற்றும் வெப்பம் போன்ற சக்திகள் மூலம் வார்த்தெடுக்கப்பட்ட தட்டுக்களை பூட்பிரிண்ட் உருவாக்கித் தந்துள்ளது. விரைவில் வேறு பல உணவகங்களுக்கும், அவர்களது தேவைக்கு ஏற்றபடி மறுசுழற்சி பேக்கேஜிங் பொருட்களை பூட்பிரிண்ட் தயாரித்துத் தரவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
18-நவ-202019:56:05 IST Report Abuse
bal எது பிடிக்குமோ அதை அளவோடு சாப்பிடுங்கள்...நல்லா நடங்கள்...நல்லா தூங்குங்கள்...நல்ல வேலை செய்யுங்கள்...இந்த நாட்டில் எடை குறைக்க KETOஎன்று ஒரு கம்பெனி இருக்கு அதன் எடை குறைப்பு ப்ரோக்ராம்களால் சில பேர் சாகின்றனர்...இயற்கை எப்போதும் நம் நலனுக்காகவே உண்டே....
Rate this:
Cancel
Baskar - sollamudiyatha naadu,யுனைடெட் கிங்டம்
15-நவ-202017:02:53 IST Report Abuse
Baskar இதை விட, edible flours அதாவது நம் அன்றாடம் சாப்பிடக்கூடிய மாவுக்களிலிருந்து(தாவரங்கள் ஓகே), தட்டு மற்றும் கப் தயாரித்தால் நன்றாக இருக்கும். இதில் ஒரே சவால் தண்ணீர் தான். ரசம், சாம்பார், காபி, தேநீர் போன்ற உணவனுகள். தயவு செய்து யாராவது செய்து காட்டுங்களேன். பேப்பர் (பல்ப்), பிளாஸ்டிக் சுற்றுப்புற சூழல்களுக்கு கேடு விளைவிக்கும்.
Rate this:
Cancel
SENTHIL - Bengaluru,இந்தியா
15-நவ-202010:07:23 IST Report Abuse
SENTHIL அருமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X