சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சூட்டை தடுக்கும் ஜன்னல் கண்ணாடி

Added : நவ 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பல மாடிக் கட்டிட ஜன்னல்களை மின்சாரம் சேமிக்கும் கருவிகளாக மாற்ற முடியும். முன்பு, இரட்டைக் கண்ணாடி போட்ட ஜன்னல்கள் இதற்கு உதவின. இரு கண்ணாடிகளுக்கு இடையே நிரம்பியுள்ள காற்று, வெளி வெப்பத்தை கட்டிடத்திற்குள் வரவிடாமல் தடுத்துவிடும். தற்போது, சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்த தொழில்நுட்பத்தை ஒருபடி மேலே எடுத்துச்
சூட்டை தடுக்கும் ஜன்னல் கண்ணாடி

பல மாடிக் கட்டிட ஜன்னல்களை மின்சாரம் சேமிக்கும் கருவிகளாக மாற்ற முடியும். முன்பு, இரட்டைக் கண்ணாடி போட்ட ஜன்னல்கள் இதற்கு உதவின. இரு கண்ணாடிகளுக்கு இடையே நிரம்பியுள்ள காற்று, வெளி வெப்பத்தை கட்டிடத்திற்குள் வரவிடாமல் தடுத்துவிடும். தற்போது, சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்த தொழில்நுட்பத்தை ஒருபடி மேலே எடுத்துச் சென்றுள்ளனர்.

ஜன்னல் கண்ணாடிகளுக்கு இடையில் காற்றுக்கு பதிலாக, ஹைட்ரோஜெல், நீர் மற்றும் நிலைப்படுத்தும் கலவையை நிரப்பி உள்ளனர். ஜன்னல் கண்ணாடிகளுக்கு இடையே உள்ள திரவம், பகலில் சூரிய கதிரிலுள்ள வெப்பத்தை உள்வாங்கி சேமித்துக்கொள்ளும். திரவத்தின் வெப்பநிலை உயர உயர, மதியத்தை தாண்டும்போது, சூரிய ஒளியை உள்ளே விடாமல் தடுக்கும் வகையில், ஒளி கடத்துவதையும் அது நிறுத்திவிடும்.

இதனால், வெளி வெப்பம் உள்ளே செல்லாமல் தடுக்கப்படும். எனவே, குளிர் சாதனத்தை அதிகம் பயன்படுத்த தேவையில்லை. அதேபோல, இரவில் அந்த திரவம் சேமித்த வெப்பத்தை மெல்ல கசிய விடும். இதனால், கட்டிடத்திற்குள், இரவில் வெப்பமூட்டும் கருவிகளை பயன்படுத்த தேவையில்லை.

இந்த புது ஜன்னல் தொழில்நுட்பத்தால், 45 சதவீத மின் செலவு குறையும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. தவிர, வெளியிலிருந்து வரும் இறைச்சலில், 15 சதவீதத்தையும் இக் கண்ணாடிகள் தடுத்துவிடுகின்றன. இந்த தொழில்நுட்பம் சந்தைக்கு வந்தால், நல்ல கிராக்கி உறுதி.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-நவ-202023:18:16 IST Report Abuse
தமிழவேல் ஆரம்ப காலங்களில், இரண்டு கண்ணாடிகளின் நடுவில் காற்று நிரப்படவில்லை. காற்றை எடுத்துவிட்டு வெற்றிடமாக்கப்பட்டது. இதுவே உஷ்ணம், குளிர் கடத்தலை மிகவும் குறைத்தது. (அதாவது தெர்மல் பிளாஸ்க் போல) அதன் பின் வெற்றிடத்தில் ஒரு வகை கேஸ் (argon ) நிரப்பப் பட்டது. அதன் பின் ion என்ற உலோகம் மிக மெல்லிய அளவில் உட்புற கண்ணாடியில் ஒரு பக்கம் மட்டும் பூசப்பட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X