சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பசுமை ஹைட்ரஜனுக்கு மவுசு கூடுமா?

Added : நவ 14, 2020
Share
Advertisement
உலகளாவிய எரிசக்தி நிறுவனமான பீ.பி மற்றும் மாற்று எரிசக்தி ஜாம்பவானான ஓர்ஸ்டெட் ஆகிய நிறுவனங்கள் விரைவில் ஹைட்ரஜன் எரிபொருளை கூட்டாகத் தயாரிக்கவுள்ளன.ஏற்கனவே ஹைட்ரஜன் ஒரு முக்கியமான எரிபொருளாக உள்ளது. ஆனால், பீ.பி.,- ஓர்ஸ்டெட் கூட்டணி தயாரிக்கப் போவது, சூரிய ஒளி மின்சாரம் மூலம் நீரில் உள்ள ஹைட்ரஜனை தனியாகப் பிரித்தெடுப்பது தான்.பெட்ரோலிய மூலப் பொருட்களைக் கொண்டு
பசுமை ஹைட்ரஜனுக்கு மவுசு கூடுமா?

உலகளாவிய எரிசக்தி நிறுவனமான பீ.பி மற்றும் மாற்று எரிசக்தி ஜாம்பவானான ஓர்ஸ்டெட் ஆகிய நிறுவனங்கள் விரைவில் ஹைட்ரஜன் எரிபொருளை கூட்டாகத் தயாரிக்கவுள்ளன.
ஏற்கனவே ஹைட்ரஜன் ஒரு முக்கியமான எரிபொருளாக உள்ளது. ஆனால், பீ.பி.,- ஓர்ஸ்டெட் கூட்டணி தயாரிக்கப் போவது, சூரிய ஒளி மின்சாரம் மூலம் நீரில் உள்ள ஹைட்ரஜனை தனியாகப் பிரித்தெடுப்பது தான்.

பெட்ரோலிய மூலப் பொருட்களைக் கொண்டு உற்பத்தியாகும் ஹைட்ரஜனுக்கு தற்போது அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே முழுதும் மாற்று எரிசக்தி முறை மூலம் பீ.பி-ஓர்ஸ்டெட் உற்பத்தி செய்யும் 'பசுமை' ஹைட்ரஜனுக்கு மரியாதை தரும் சந்தை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கென இந்த கூட்டு நிறுவனம் விரைவில் வடமேற்கு ஜெர்மனியில் ஆண்டுக்கு, 9 ஆயிரம் மெட்ரிக் டன்கள் ஹைட்ரஜன் தயாரிக்கும் லின்ஜென் ரீபைனரி என அற ஆலையை துவங்கவுள்ளது. பசுமை ஹைட்ரஜனுக்கு ஆலைகளில் மட்டுமல்ல, லாரி, பஸ், கார் என சகல போக்குவரத்து துறையிலும் மவுசு கூடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X