சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வோட்கா முதல் ராக்கெட் எரிபொருள் வரை

Added : நவ 14, 2020
Share
Advertisement
காற்றில் கலந்துள்ள கார்பன் டையாக்சைடை வடிகட்டி, அதிலிருந்து வோட்கா மதுவையும், சானிடைசரையும் தயாரித்து அண்மையில் அசத்தியது 'ஏர் கம்பெனி'. அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியிலுள்ள இந்நிறுவனம், தற்போது ராக்கெட் எரிபொருள் தயாரிப்பிலும் கவனம் செலுத்தவுள்ளது.பெட்ரோலியப் பொருட்களைப் பயன்படுத்தி ராக்கெட் எரிபொருளை தயாரிப்பதற்கு மாற்றாக, காற்றிலுள்ள
வோட்கா முதல் ராக்கெட் எரிபொருள் வரை

காற்றில் கலந்துள்ள கார்பன் டையாக்சைடை வடிகட்டி, அதிலிருந்து வோட்கா மதுவையும், சானிடைசரையும் தயாரித்து அண்மையில் அசத்தியது 'ஏர் கம்பெனி'. அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியிலுள்ள இந்நிறுவனம், தற்போது ராக்கெட் எரிபொருள் தயாரிப்பிலும் கவனம் செலுத்தவுள்ளது.

பெட்ரோலியப் பொருட்களைப் பயன்படுத்தி ராக்கெட் எரிபொருளை தயாரிப்பதற்கு மாற்றாக, காற்றிலுள்ள கார்பன்டையாக்சைடையே, ராக்கெட் எரிபொருளாக மாற்ற முடியும் என்கிறது ஏர் கம்பெனி. இதற்காக அது நிறுவிஉள்ள ஆலை, காற்றாலைகள் மூலம் கார்பன்டையாக்சைடை வடிகட்டி, எரிபொருளாக மாற்றுகிறது. 1 கிலோவாட் காற்று மின்சாரத்தை வைத்து, மீத்தேனிலிருந்து 221 கிராம் கார்பன்டையாக்சைடை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை ஏர் கம்பெனி உருவாக்கியுள்ளது.

அடுத்த கட்டமாக, செவ்வாய் பயணத்தை ஏர் கம்பெனி குறிவைத்துள்ளது. இதுவரை செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதை, ஒரு வழிப் பயணமாகவே திட்டமிடப் பட்டு வருகிறது. ஏனெனில் செவ்வாயிலிருந்து பூமிக்கு திரும்பி வரும் பல மாத பயணத்திற்கு எரிபொருளை நிரப்ப இன்று வழி இல்லை. இதை மாற்றத் துடிக்கிறது ஏர் கம்பெனி. செவ்வாயின் வளி மண்டலத்தில், 95 சதவீதம் கார்பன்டையாக்சைடுதான். எனவே அங்கு ராக்கெட் எரிபொருளைத் தயாரித்து, பூமிக்கு மனிதர்களை திரும்பவும் அழைத்து வர உதவ முடியும் என ஏர் கம்பெனி நம்புகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X