பொது செய்தி

இந்தியா

' பாலைவனமோ, பனிமலையோ ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தில் தான் எனக்கு தீபாவளி '- பிரதமர் மோடி

Updated : நவ 14, 2020 | Added : நவ 14, 2020 | கருத்துகள் (28+ 14)
Share
Advertisement
ஜெய்சால்மர்: பனிமலையோ, பாலைவனமோ, ராணுவ வீரர்கள் எங்குள்ளனரோ அங்கு தான் எனக்கு தீபாவளி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் வீரர்களுக்கு இனிப்பு வழங்கி, அவர்களுடன் தீபாவளி வாழ்த்துக்களை பிரதமர் பகிர்ந்து கொண்டார்.பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், எல்லை பகுதிக்கு சென்று, அவர்களுடன் தீபாவளி பண்டிகையை
Prime Minister of India, PmModi, Narendramodi, soldiers, army, deepavali, jaisalmer,

ஜெய்சால்மர்: பனிமலையோ, பாலைவனமோ, ராணுவ வீரர்கள் எங்குள்ளனரோ அங்கு தான் எனக்கு தீபாவளி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் வீரர்களுக்கு இனிப்பு வழங்கி, அவர்களுடன் தீபாவளி வாழ்த்துக்களை பிரதமர் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், எல்லை பகுதிக்கு சென்று, அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார். 2014ல் சியாச்சினிலும், 2015ல் பஞ்சாபிலும், 2016ல் ஹிமாச்சல பிரதேசத்தில் சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினார்.2017 ல் காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள குரேஸ் பகுதியிலும், 2018 ம் ஆண்டில் உத்தரகண்டிலும், கடந்த ஆண்டு(2019)ல் காஷ்மீர் மாநிலம் ரஜோரியிலும், மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

இந்த ஆண்டு தீபாவளியை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள லாங்கிவாலா முகாமில் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.

ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், பனிமலையோ, பாலைவனமோ ராணுவத்தினர் எங்கிருக்கிறார்களோ அங்குதான் எனக்கு தீபாவளி. உறையும் பனியிலும் அதிக வெப்பத்திலும், ராணுவ வீரர்கள் நாட்டை காக்கின்றனர். அவர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது. மக்களுடைய அன்பை உங்களுக்காக நான் கொண்டு வந்துள்ளேன். ராணுவத்தினர் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும்போது நான் இருமடங்கு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் தீபாவளியை கொண்டாடும்போது தான் எனக்கு மனநிறைவு ஏற்படுகிறது. பாலைவனமோ, பனிமலையோ ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தில் தான் எனக்கு தீபாவளி ராணுவ வீரர்களை கவுரவப்படுத்த மக்கள், தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும்.


latest tamil news



130 கோடி இந்தியர்களும் உங்களுடன் தான் உள்ளனர். உங்களின் தைரியம் மற்றும் பலத்தை கண்டு ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகின்றனர். நமது நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் இருந்து நமது தைரியமிக்க வீரர்களை, உலகின் எந்த சக்தியும் தடுத்து நிறுத்த முடியாது.

இந்தியா தனது பாதுகாப்பு திறனை அதிகரிக்கவும், பாதுகாப்பு துறையின் தன்னிறைவு அடையவும் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறது. உள்நாட்டில் ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.

நமது தைரியமிக்க வீரர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர். நமது மேற்கத்திய எல்லையில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான், தனது பாவத்தை மறைக்க முயற்சி செய்தது. ஆனால், அந்நாட்டிற்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. லாங்கிவாலாவில் நடந்த போரை பல தலைமுறையினர் நினைவில் வைத்திருப்பார்கள். நமக்கு தேசநலனே முக்கியம். அதில் சமரசத்திற்கு எந்த இடமும் இல்லை. எல்லையை விரிவாக்க நினைக்கும் நாடு பற்றி உலகம் அறிந்து வைத்துள்ளன. எல்லையை விரிவாக்கும் காலம் 18 ம் நூற்றாண்டை சேர்ந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (28+ 14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-நவ-202014:58:27 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு அந்த DRESS போட்டவர் அப்படியே அவர்கள் உடனே இருக்கட்டும் நாடு ஆவது தப்பிக்கட்டும்
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
15-நவ-202013:04:50 IST Report Abuse
Visu Iyer அண்மையில் ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர் ...
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-நவ-202010:19:36 IST Report Abuse
முக்கண் மைந்தன் சிவாஜி ஐயாவ நடிப்பு மிஞ்ச ஆளே கெடயாதும்பாங்க ஆனா சிவாஜி ஐயாவோட மொகத்த பாத்துட்டே இருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X