தாத்தாவிடம் தான்யா கற்றது!

Added : நவ 14, 2020
Share
Advertisement
தீபங்கள் அணிவகுப்பில் தீஞ்சுடரொளியால் ஜொலிப்பவள், தித்திப்பான பார்வையால் இளம் மனங்களை திக்குமுக்காட வைத்து திரையில் தெறிக்கும் வண்ண மத்தாப்பு சிரிப்பில் ரசிகர்களின் அடங்காத கரவொலிகளை அள்ளிக் குவிக்கும் அழகு மங்கை நடிகை தான்யா. தினமலர் 'தீபாவளி ஸ்பெஷல்' என்றதுமே கம்பி மத்தாப்பாக முகம் ஜொலித்து 'வாவ்...தேங்ஸ் பார் கிவ்விங் சான்ஸ்' என கூறி சந்தோஷமாய் பேசிய
தாத்தாவிடம் தான்யா கற்றது!

தீபங்கள் அணிவகுப்பில் தீஞ்சுடரொளியால் ஜொலிப்பவள், தித்திப்பான பார்வையால் இளம் மனங்களை திக்குமுக்காட வைத்து திரையில் தெறிக்கும் வண்ண மத்தாப்பு சிரிப்பில் ரசிகர்களின் அடங்காத கரவொலிகளை அள்ளிக் குவிக்கும் அழகு மங்கை நடிகை தான்யா. தினமலர் 'தீபாவளி ஸ்பெஷல்' என்றதுமே கம்பி மத்தாப்பாக முகம் ஜொலித்து 'வாவ்...தேங்ஸ் பார் கிவ்விங் சான்ஸ்' என கூறி சந்தோஷமாய் பேசிய தருணம்...


குடும்பம் - படிப்பு

தாத்தா பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன். அம்மா லாவன்யா ஸ்ரீராம், நாட்டிய கலைஞர். சகோதரி அபராஜிதா. நான் எம்.ஏ., ஹூமன் ரிசர்ச் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன்.


சினிமா ஆசை எப்போது வந்தது

தாத்தாவை பாக்கும் போதெல்லாம் நடிப்பு ஆசை வரும். படிக்கும் போதே வந்துவிட்டது. ஆரம்பத்தில் தாத்தாவின் அடையாளமும் எனக்கு கை கொடுத்தது.


நடிப்பு அனுபவம்

'பிருந்தாவனம்' படம் என் முதல் சினிமா 'என்ட்ரி' என்றாலும் 'பலே வெள்ளையத்தேவா' முதல் ரிலீஸ். 'கருப்பன்'மூலம் பட்டிதொட்டியெல்லாம் தான்யா தெரிந்தாள். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளேன்.


தற்போதைய கைவச படங்கள்

நடிகர் சிபிராஜூடன் நடித்த 'மாயோன்' வெளியாகவுள்ளது. தமிழில் இதுதவிர 'சுந்தரபாண்டியன்' பட இயக்குனர் பிரபாகர் இயக்கத்தில் பெயரிடாத படம் உட்பட மூன்றும், தெலுங்கில் ஒரு படத்திலும் சூட்டிங் நடக்கின்றன.


உங்களோட 'ட்ரீம் பாய்'

இதுவரை யாரும் இல்லை. இனிமேல் வருவானானு பார்ப்போம்.


தாத்தாவிடம் கற்றுக்கொண்டது

தாத்தா 'கிரேட்'. ஆனால் கறாரானவர். நேரம் தவறாமை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பை கற்றுக்கொண்டேன்.


அவர் நடித்ததில் பிடித்த படம்

எல்லா படங்களும் பிடிக்கும். 'காதலிக்க நேரமில்லை', 'அதே கண்கள்' படங்களை அடிக்கடி பார்ப்பேன்.


நடிப்பு தவிர...

பரதநாட்டிய கலைஞர். ஏழைகளுக்கு சாப்பாடு வழங்குவது, படிப்பு செலவு ஏற்பது என மனசுக்கு பிடித்த சின்ன சின்ன சேவையை சத்தமின்றி செய்கிறேன்.


நடிக்க விரும்பும் கேரக்டர்

'இதை போல் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும்' என்ற எண்ணம் இல்லை. கதைக்கு ஏற்ற எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.


உங்களின் 'ரோல் மாடல்'

அப்படியெல்லாம் யாருமில்லை. சினிமாவில் திறமை உள்ளவர்கள் எல்லோருமே எனக்கு 'ரோல் மாடல்'கள் தான்.


தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி என்றாலே ஆனந்தம் தான். சின்ன வயசில் ஒரு மாதம் முன்னரே வரவேற்க தயாராகிவிடுவோம். காலை பூஜை முடித்து அம்மா செஞ்ச ஸ்வீட்ஸ் சாப்பிட்டு புது டிரெஸ் போட்டு பட்டாசு வெடிச்சா செம ஜாலியா இருக்கும். இந்தாண்டு இன்னும் கொரோனாவால் கட்டாயம் 'மாஸ்க்' போட்டு பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடனும்.


ரசிகர்களுக்கு

சந்தோஷமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். அனைவருக்கும் ஆனந்தமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வியாஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X