மலையாள கரையில் பிறந்து மதுரை தமிழ் பேசும் மதுரை பெண்ணாக 'சூரரைப்போற்று' படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து, ரசிகர்களின் இதயங்களை கவர்ந்திட காத்திருக்கும் நடிகை அபர்ணா பாலமுரளி மனம் திறக்கிறார்...
இந்த தீபாவளி ரொம்ப ஸ்பெஷல். அமர்க்களமானது. சுதா கொங்கரா இயக்கத்தில் நான் நடித்த 'சூரரைப் போற்று' ரிலீஸ் ஆகிறது. படம் பார்த்து ரசிகர்கள் என்ன சொல்வார்களோ என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன். நான் மலையாள பெண்ணா இருந்தாலும் ஓரளவு தமிழ் பேசுவேன். இந்த படத்தில் மதுரை பெண்ணாக மதுரை மொழி பேசி நடிச்சிருக்கேன்.
செந்தில், விருமாண்டி, கலைராணி, சத்யா மதுரை மொழி பேச பயிற்சி கொடுத்தாங்க. ஹீரோ சூர்யா மனைவியாக பொம்மி என்ற கேரக்டர் பண்ணிருக்கேன். இந்த அளவு முக்கியமான கேரக்டர் கிடைச்சது அதிர்ஷ்டம். நான் பார்த்து வியந்த 'இறுதி சுற்று'சுதா இயக்கத்தில் நடிப்பது கூடுதல் சிறப்பு. நடிப்பு தவிர பரதநாட்டியம், குச்சுபுடி, மோகினி ஆட்டம் தெரியும். அம்மா, அப்பா இசைக் கலைஞர்கள் என்பதால் இசை கற்றேன். தமிழில் 'எட்டு தோட்டாக்கள்', மலையாளத்தில் பிரபல மியூசிக் டைரக்டர்கள் படங்களில் பாடியிருக்கேன்.
எனக்கு எல்லா நடிகர்களையும் பிடிக்கும். ஆனால், நயன்தாரா தான் எனக்கு 'ஆல் டைம் பேவரட்' சீனியர் நடிகைகள் ரேவதி, ஊர்வசி நடிப்பெல்லாம் பார்க்கும் போது பெருமையாக இருக்கும். என்னை கூட நிறைய பேர் 'கண்கள் அழகாக இருக்கு'ன்னு சொல்லியிருக்காங்க. ரசிகர்கள் என் நடிப்பையும் கண்டிப்பாக ரசிப்பாங்க. கொரோனா சூழலில் படம் ஓ.டி.டி.,ல ரிலீஸ் ஆகுறது வருத்தம் தான். இருந்தாலும் நம்ம பாதுகாப்பு தான் முக்கியம். இந்த தீபாவளிக்கு கண்டிப்பா படம் பாருங்க சந்தோஷமா தீபாவளியை கொண்டாடுங்க.
கவி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE