தமிழகத்தில் பால் உற்பத்தி கூட்டுறவு இணைய (பெடரேஷன்) சேர்மன் பணியிடம் காலியாக உள்ள நிலையில் ஆவினில் நேரடி நியமனம், பதவி உயர்வு விதிகளில் அவசரகதியில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
ஆவின் கமிஷனர் வள்ளலார் தலைமையில் ஆவின் ஒன்றிய சேர்மன்கள்பங்கேற்ற இணைய வழி கூட்டத்தில் இதுதொடர்பாக 81 திருத்தங்கள்மேற்கொள்ளப்பட்டுஅரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இத்திருத்தங்கள் மூலம் ஆவின் ஒன்றியங்களின் அதிகாரம் பறிபோவதுடன்சென்னை மட்டுமேஅதிகார மையாக இருக்கும் நிலை ஏற்படும் என சர்ச்சை எழுந்துள்ளது.
திருத்தங்கள் என்ன
சீனியர் தொழிற்சாலை உதவியாளர் (எஸ்.எப்.ஏ.,) முதல் மேலாளர் வரை உள்ள பணி நியமனங்
களின் அடிப்படை தகுதிகள் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளன. இதன்படி எஸ்.எப்.ஏ., பதவிக்கு கல்வி தகுதி பிளஸ் 2 என்பதை 'பத்தாம் வகுப்பு தேர்ச்சி' என மாற்றப்பட்டுள்ளது.ஜூனியர்
எக்ஸிகியூட்டிவ், எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு யு.ஜி., படிப்புடன் கூட்டுறவு சட்ட விதிகள் தொடர்பான 'டி.கோப்.,' பட்டயப்படிப்பு தகுதியாக இருந்தது. தற்போது 'டி.கோப்.,' நீக்கம்
செய்யப்பட்டுள்ளது.
மேலாளர், துணை மேலாளர் என இரு நேரடி பதவிகளுக்கும் ஒரே கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுவரை மேலாளர், துணை மேலாளர் பணியிடங்கள் அந்தந்த ஆவின்
ஒன்றியங்கள் நியமனம் செய்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது உட்பட 81 முக்கிய
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஆவின் ஒன்றிய சேர்மன்கள் சிலர் கூறியதாவது:
சில அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி அனுமதி அளித்தோம். பெடரேஷன் சேர்மன்
இல்லாத நேரம் விவாதமின்றி இதுபோன்ற முக்கியதிருத்தங்கள் மேற்கொள்ள என்ன அவசியம் ஏற்பட்டது. புதிய பெடரேஷன் சேர்மன் பொறுப்பேற்றவுடன் நிர்வாக குழு கூடி மீண்டும் விவாதித்த பின் இத்திருத்தங்களுக்கு அரசு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்றனர்.
மதுரைக்கு சிக்கல்
மதுரை ஆவினில் மேலாளர் உட்பட 63 பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான தேர்வு பழைய விதிமுறைப்படி நடக்கவுள்ளது. புதிய திருத்தங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தால் பழைய விதி அடிப்படையில் தேர்வு செய்யும் முறைக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
-நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE