வாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி: எழுத்தாளர் நாஞ்சில் நாடன்

Updated : நவ 15, 2020 | Added : நவ 15, 2020
Advertisement
தமிழ் நவீன படைப்பிலக்கிய தளத்தில் மிக முக்கியமான படைப்பாளர் நாஞ்சில்நாடன். சாகித்ய அகாடமி விருது பெற்ற பிறகு, அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் இவர். சோர்வு இல்லாமல் வாசிப்பதும், எழுதுவதும் இவரது இயல்பு. இந்த ஊரடங்கு காலத்தில் 150க்கும் மேற்பட்ட நூல்களை வாசித்து இருப்பதோடு, கட்டுரைகள், சிறுகதைகள் என சிறிதும் சோர்வின்றி எழுதி தள்ளுகிறார். காரணம்... அவரின் வாசிப்பு
எழுத்தாளர், நாஞ்சில்நாடன்

தமிழ் நவீன படைப்பிலக்கிய தளத்தில் மிக முக்கியமான படைப்பாளர் நாஞ்சில்நாடன். சாகித்ய அகாடமி விருது பெற்ற பிறகு, அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் இவர். சோர்வு இல்லாமல் வாசிப்பதும், எழுதுவதும் இவரது இயல்பு. இந்த ஊரடங்கு காலத்தில் 150க்கும் மேற்பட்ட நூல்களை வாசித்து இருப்பதோடு, கட்டுரைகள், சிறுகதைகள் என சிறிதும் சோர்வின்றி எழுதி தள்ளுகிறார். காரணம்... அவரின் வாசிப்பு பழக்கம். தீபாவளி கொண்டாட்டத்தின் இடையே நமக்காக சிறிது நேரம் ஒதுக்கினார். இதோ அவருடன்...!
இந்த ஊரடங்கு காலத்தில் என்ன எழுதினீர்கள்?சொல் சார்ந்த ஒரு கட்டுரை நுாலை எழுதி இருக்கிறேன். தமிழில் ஓர்மை என்ற ஒரு சொல் இருக்கிறது. அதை இங்கு ஒருமை என்ற பொருளில் பயன்படுத்துகின்றனர். அதன் பொருள் அதுவல்ல, ஓர்மை என்றால் நினைவு என்பதுதான் பொருள்.மலையாளத்திலும், நாஞ்சில் நாட்டு பகுதியிலும் நினைவு என்ற அர்த்தத்தில்தான் அந்த சொல்லை இன்றைக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இப்படி பல சொற்கள், தவறான அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தப்படுகின்றன. இது போன்ற சொற்கள் குறித்து, 16 கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். எட்டு சிறுகதைகளை எழுதி இருக்கிறேன். அவை நுாலாக வர உள்ளது.


கொரோனா விடுப்பில் என்ன படித்தீர்கள்?


கொரோனாவுக்கு உண்மையில் நன்றி சொல்ல வேண்டும். 150 நுால்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புதிய எழுத்தாளர்களின் சில படைப்புகளை படித்தேன். நிறைய கர்நாடக இசை கேட்டேன். உண்மையில் இந்த ஊரடங்கு காலம் பயனுள்ளதாக இருந்தது. வாசிப்பு, எழுத்து, இசை இவை முன்றும் தான், என்னை உயிர்ப்புடன் வைத்து இருக்கிறது.


சமீபத்தில் வெளி வந்துள்ள புதிய படைப்புகள் பற்றி?


மன்னார்குடியை சேர்ந்த வேல்முருகன் இளங்கோ என்ற இளைஞர், 'மன்னார் பொழுதுகள்' என்ற நாவலை எழுதி இருக்கிறார். சமீபத்தில் வந்த நாவல்களில் இது நல்ல நாவல். கீரனுார் ஜாகீர்ராஜாவின் 'ஞாயிறு கடை உண்டு', எஸ்.செந்தில்குமாரின் 'கழுதை பாதை' காமுத்துரையின் 'கமுத்தி', மலர்வதி எழுதிய 'கருப்பட்டி' சிறுகதை தொகுப்பு இவைகள் எல்லாம் நல்ல படைப்புகள். இன்றைக்கு இளைஞர்கள் நிறைய பேர் நன்றாக எழுதுகின்றனர்.


இணைய இலக்கிய இதழ்களில், அதிகம் எழுதுகிறீர்கள். அந்த அனுபவம் பற்றி?


இணைய இதழ்களில் எழுதுவது எனக்கு வசதியாக உள்ளது. காரணம் பக்க கட்டுப்பாடுகள் அதில் இல்லை. நான் எத்தனை பக்கங்கள் எழுதினாலும், அப்படியே வெளி வருகிறது. ஒரு கட்டுரைக்கு எனக்கு குறைந்தது, 15 பக்கங்கள் தேவை. அந்த வசதி இணையத்தில் கிடைக்கிறது. அதனால் முக்கியமான இலக்கிய இதழ்களில் மட்டும் எழுதுகிறேன்.


நாஞ்சில் நாட்டு உணவுகள் பற்றி கட்டுரைகள் எழுதினீர்கள். அது எப்போது நுாலாக வெளி வருகிறது?


நாம் என்ன தானியத்தை விளைய வைத்தோமோ, அதைத்தான் உணவாக சாப்பிட்டோம். இதுதான் நம்முடைய மரபு சார்ந்த உணவு பழக்கம். நாஞ்சில் நாட்டு பகுதியில், சமையலுக்கு தேங்காய் எண்ணெய்தான் பெரும்பாலும் பயன்படுத்துவர். காய், கனி எதுவாக இருந்தாலும், நம் ஊரில் கிடைப்பதுதான், நம்முடைய விருப்ப உணவாக இருந்தது.அதை சாப்பிட்ட வரை, உடலுக்கு எந்த பிரச்னையும் வரவில்லை. இப்போது கிடைக்காத உணவை, தேடிப்போய் சாப்பிடும் போதுதான் பிரச்னை வருகிறது. நாஞ்சில் நாட்டு உணவுகள் பற்றி விரிவாக, 400 பக்கங்களில் எழுதி இருக்கிறேன். விரைவில் நுாலாக வர உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
03-ஆக-202109:57:52 IST Report Abuse
Matt P ஓர்மை குறைவு ,,,என்று கூறுவது நாஞ்சில் நாட்டு வழக்கம் தான். நினைவு குறைவு என்ற பொருளில். ,,சென்னையில் ஒரு தடவை சாலினி இளந்திரையன் சாலை இளந்திரையன் என்ற கணவன் மனைவி- டெல்லியில் தமிழ் பேராசிரியராக வேலை பார்த்தவர்கள்.அவர்கள் கூட்டத்துக்கு சென்றிருந்தபோது, சாலை சொன்னார்.. ஓர்மை என்பது தமிழ் வார்த்தை. அவரின் சொந்த பகுதியான பாளையங்கோட்டையில் வட்டார பேச்சு என்றார். அப்போது தான் நினைத்து கொண்டேன் ..அது ஒரு மலையாள வாரத்தை என்று யாரும் அடித்து சொல்ல முடியாது என்று .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X