சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

எதிர்க்கட்சியினருக்கும் பாய்ந்த 'கமிஷன்' தொகை!

Updated : நவ 15, 2020 | Added : நவ 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
''தீபாவளி அமைதியா முடிஞ்சது பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய். நண்பர்கள் அனைவருக்கும், தீபாவளி முறுக்கு கொடுத்தார், நாயர்.அதைக் கடித்தபடியே, ''சுற்றுலாத்துறை அமைச்சர் நடராஜனை, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, அ.தி.மு.க., திருச்சி மாநகர் மாவட்டச் செயலரா நியமிச்சாங்க பா...'' என, மேட்டரை ஆரம்பித்த அன்வர்பாயே தொடர்ந்தார்...''அவர், மாவட்டத்துல புதிய
டீ கடை பெஞ்ச்

''தீபாவளி அமைதியா முடிஞ்சது பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய். நண்பர்கள் அனைவருக்கும், தீபாவளி முறுக்கு கொடுத்தார், நாயர்.

அதைக் கடித்தபடியே, ''சுற்றுலாத்துறை அமைச்சர் நடராஜனை, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, அ.தி.மு.க., திருச்சி மாநகர் மாவட்டச் செயலரா நியமிச்சாங்க பா...'' என, மேட்டரை ஆரம்பித்த அன்வர்பாயே தொடர்ந்தார்...

''அவர், மாவட்டத்துல புதிய நிர்வாகிகளை நியமிக்கும் போது, தன் மகன் ஜவகர் பெயரை, பகுதி செயலர் பதவிக்கு பரிந்துரை செஞ்சார்...

ஆனா, அ.தி.மு.க., தலைமை, ஜவகருக்கு பதவி கொடுக்க முடியாதுன்னு, கறாரா சொல்லிடுச்சு பா..

.''இப்ப, மீண்டும் தன் மகனுக்கு, மாவட்ட இளைஞர் பாசறை செயலர் பதவி கொடுக்கணும்னு, பரிந்துரை செஞ்சிருக்கார்... இதற்கும், கட்சி தலைமை ஒத்துக்கலை பா...

''ஆனா, மாவட்டத்துல கட்சி வேலைகளை பார்க்குறது ஜவகர் தானாம்... 'துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகனுக்கு மட்டும் கட்சிப் பதவி, எம்.பி., பதவி கொடுக்கலாம்... என் மகனுக்கு கொடுக்கக் கூடாதா'ன்னு, நியாயம் கேட்டு, புலம்புறாராம் பா...'' என்றார், அன்வர் பாய்.

''பகுத்தறிவாளர் கும்பலோட தொல்லை தாங்க முடியலைங்க...'' என்றபடியே, அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.

''என்ன விஷயம் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, தி.மு.க., 'மாஜி' அமைச்சர், தன் கழுத்துல, சிலுவை தொங்குற ஜெப மாலையை அணிந்திருக்கார்... எப்படியும் இந்த தேர்தல்ல, 'சீட்' கிடைச்சு, அமைச்சராகணும்னு வேண்டுதலாமுங்க...

''அவர் ஜெபமாலை போடட்டும் அல்லது அய்யப்பனுக்கு மாலை போடட்டும்... யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லைங்க... இதை பற்றி யாராவது கேட்டா, 'சிலுவையை மத அடையாளமா பார்க்காம, உணர்வுபூர்வமா பார்க்கணும்'னு விளக்கம் வேற கொடுக்குறாராம்... அதான் தாங்க முடியலைங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''ஐ... இது போங்கு ஆட்டமால்லா இருக்கு... பெரியசாமி அண்ணாச்சி...

உம்ம சரக்கை எடுத்து விடும்...'' என்றார் குப்பண்ணா.

உடனே அண்ணாச்சி, ''தி.மு.க.,வினருக்கு மட்டும், கமிஷன் கொடுத்ததால, ஆளுங்கட்சியினர் ஆத்திரத்துல இருக்காவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார்.

''இந்த கமிஷனால தான், நாடு கெட்டு குட்டிச்சுவரா போயிடுத்து ஓய்...'' என வருத்தப்பட்டார், குப்பண்ணா.

''வேலுார் மாநகராட்சியில, போன மாசம், 90 கோடி ரூபாய் வேலைக்கு, 'டெண்டர்' விட்டுருக்காவ... மாவட்ட அமைச்சர், தனக்கான லஞ்சத் தொகையை, அதாவது, கமிஷனை வாங்கிட்டாரு வே...

''மத்தவங்களுக்கு, கமிஷன் பணத்தை பிரிச்சு தர்ற வேலையை, அமைச்சரின் உதவியாளர் ஒருத்தர் செஞ்சிருக்காரு... தி.மு.க.,-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கு எல்லாம், 1 சதவீதம் கமிஷன், அதாவது, 54 லட்சம் ரூபாய் கொடுத்துருக்காரு வே...

''ஆனா, அ.தி.மு.க., நிர்வாகிகள் யாருக்கும், கமிஷன் பணம் வரலை... இதனால, அவங்க ஆத்திரத்துல இருக்காவ... தேர்தல் வேலையும் செய்ய மாட்டோம்னு சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

அங்கு வந்த நபரிடம், ''புகழேந்தி, தீபாவளி எப்படி போச்சு...'' என விசாரித்தார், அந்தோணிசாமி. நண்பர்கள் இடத்தை காலி செய்தனர்.


வெங்காயம் பதுக்கலில் அதிகாரிகளுக்கு பங்கு?



நாயர் தந்த பில்டர் காபியை பருகியபடியே, ''தொகுதியில, ஆளுங்கட்சிக்கு மட்டும் தனி கவனிப்பு நடக்கறது ஓய்...'' என, விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.

''எந்த தொகுதியில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''அ.தி.மு.க., மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலரா இருக்கறவர் ராஜன் செல்லப்பா... மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஆகவும் இருக்கார் ஓய்...

''வர்ற தேர்தல்ல, திருப்பரங்குன்றம் தொகுதியில போட்டியிட முடிவு பண்ணி
யிருக்கார்... இதுக்காக, கொரோனா நிவாரணம் துவங்கி, பல களப்பணிகளை செஞ்சுண்டு இருக்கார் ஓய்...

''இப்ப, இந்த தொகுதி எம்.எல்.ஏ.,வா இருக்கற தி.மு.க.,காரரான டாக்டர் சரவணன், மறுபடியும் தொகுதியை தக்க வச்சுக்க, பம்பரமா சுத்திண்டு இருக்கார்... அதே நேரம், அரசு விழாக்கள்ல, தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத, ராஜன் செல்லப்பாவுக்கு மட்டும் அதிகாரிகள் அழைப்பு குடுத்துட்டு, தன்னை புறக்கணிக்கறதா, ஒன்றிய அதிகாரிகளிடம், சரவணன் நொந்துக்கறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''தீபாவளி பெயர்ல, செமத்தியா வாரி குவிச்சிட்டாவ வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார், அண்ணாச்சி.
''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''கோவையில, போலி பத்திரிகை நிருபர்கள் அதிகமாயிட்டாவ... தீபாவளி மாமூலுக்காக, 'டாஸ்மாக்' கடைகளுக்கு போய், பணம் கேட்டு மிரட்டியிருக்காவ... தினமும், நாலஞ்சு பேராவது இப்படி வந்து, கடைக்கு, 500 - 1,000 ரூபாய்னு, 'ஆட்டை'யை போட்டுட்டு போயிடுதாவ வே...

''சில ஊழியர்கள், 'ஐ.டி., கார்டு' கேட்டப்ப, 'பத்திரிகையில எழுதி, உங்களை தொலைச்சுப்புடுவோம்'னு மிரட்டியிருக்காவ வே... அதே மாதிரி, ராத்திரி சரக்கு விற்பனை, கூடுதல் விலைக்கு மது விற்கிறதுன்னு ஊழியர்களும், பல முறைகேடுகள் பண்றதால, போலிகள் கேட்கிற பணத்தை, சத்தம் காட்டாம, குடுத்து தொலைச்சிடுதாவ வே...'' என்றார்,
அண்ணாச்சி.

''தீபாவளி வாழ்த்துகள் பாலாஜி...'' என, தெருவில் சென்றவருக்கு கையாட்டிய
அன்வர்பாய், ''வெங்காய பதுக்கல்ல, பலமான கவனிப்பு நடந்திருக்குமோன்னு விவசாயிகள் சந்தேகப்படுறாங்க பா...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார்.

''பெரம்பலுார் விவகாரமாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''ஆமாம்... திருச்சி மார்க்கெட்ல, வெங்காய மண்டி வச்சிருக்கிற பா.ஜ., பிரமுகர் ஒருத்தர், பெரம்பலுார் மாவட்டத்துல இருக்கிற கோழி பண்ணைகளை வாடகைக்கு எடுத்து, பெரிய வெங்காயங்களை பதுக்கி வச்சிருந்தார்...

''இது சம்பந்தமா புகார் வரவே, பெரம்பலுார் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் அங்க ஆய்வு செஞ்சாங்க... ஆனா, 'இது, விதை வெங்காயம்... நாங்க சாகுபடி பண்ண வச்சிருக்கோம்'னு சொன்னதை, பச்சப்புள்ள மாதிரி நம்பி, அதிகாரிகள் திரும்பிட்டாங்க பா...

''பத்திரிகையாளர்கள் கேட்டப்ப, 'எங்களுக்கு வெங்காயங்களை பறிமுதல் பண்ற அதிகாரம் இல்லை'ன்னு சொல்லிட்டாங்க... மறுநாள், திருச்சியில இருந்து வந்த, குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலானாய்வு போலீசார், 4 டன் வெங்காயங்களை பறிமுதல் பண்ணிட்டாங்க பா...

''வெங்காயம் விவகாரத்துல, ஏனோ தானோன்னு நடந்துக்கிட்ட, பெரம்பலுார் மாவட்ட வேளாண் அதிகாரிகளுக்கு, 'கவனிப்பு' நடந்திருக்குமோன்னு, விவசாயிகள் சந்தேகப்படுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

அரட்டை முடிய அனைவரும் கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-நவ-202006:14:58 IST Report Abuse
D.Ambujavalli வேலூர் ஆச்சே , திமுக ‘பெருந்தலை’ குரல் எழுப்பாமல் இருக்க கமிஷன் போயிருக்கும் இதை எம் ஜி ஆர் ஒரு நடைமுறையாகவே வைத்திருந்தார். அம்மா முறுக்கிக் கொள்ளவே தான் கோர்ட், விசாரணை, ஜெயில் எல்லாம் ‘பாய்ந்தது’
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X