கிரைம் நாவல் உலகின் முடிசூடா மன்னன் என்று பெயர் பெற்றவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். தமிழில் ஆயிரம் நாவல்களுக்கு மேல் எழுதி, கின்னஸ் சாதனை படைத்தவர். கோவை வடவள்ளியில் வசிக்கும் இவர், வாரம் ஒரு நாவல், தினமும் சிறுகதைகள் என, எப்போதும் எழுத்தில் பிசியாக இருக்கிறார். ‛‛ இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், எத்தனை நாவல் எழுதினீர்கள் , '' என கேட்ட போது, ‛‛ ஒரே நாவல்தான் எழுதி இருக்கிறேன்,'' என்கிறார். ‛கருநாகபுர கிராமம்'- இதுதான் அந்த கிரைம் நாவல், ‛‛ நாவலின் தலைப்பே ரொம்ப திரில்லிங்காக இருக்கே, '' என்று நம் ஆவலை உணர்ந்த அவர், நம் வாசகர்களுக்காக நாவலின் அவுட்லைனை சொன்னார்....
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, கருநாக சித்தரின் (அரவசித்தர்) வாழ்க்கைக்கும், இந்த, 20ம் நுாற்றாண்டில் வாழ்ந்து வரும் கருநாகபுரத்து மக்களின் சாவுக்கும் சம்பந்தம் இருக்கிறது.வரலாற்று காலத்தில் நடந்த சம்பவங்களையும், சமகாலத்தில் நடக்கும் சம்பவங்களையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்து, இந்த நாவலை எழுதி இருக்கிறேன்.
இப்ப கதை கேளுங்க!
சித்தரின் சமாதி!
நாவல் ஆக வருகிறது
கொரோனா காலம்!''எப்படி இருக்கிறது இந்த கொரோனா காலம்,'' என்று கேட்டதற்கு, பதிலளித்த ராஜேஷ்குமார்,''அடுத்த நாவல் அதை பற்றியதுதான். 'வரம் போல் வந்த கொரோனா' என்று தலைப்பு கூட வைத்து விட்டேன். இந்த நோயை பலர், 'நெகடிவ்' ஆக பார்க்கின்றனர். நான் இதை 'பாசிடிவ்' ஆக பார்க்கிறேன். ஏன், எதற்கு என்பதைதான் அந்த நாவலில் சொல்ல போகிறேன்,'' என்கிறார்.
''இந்த நோயால் ஏராளமானோர் இறந்து விட்டார்களே?''
''இறந்தவர்களின் எண்ணிக்கையை பார்த்து, மக்கள் பயப்படுகின்றனர். இந்த இறப்பு எண்ணிக்கை எப்போதும் நடப்பதுதான். இந்தியாவில் ஒரு நாளைக்கு தோராயமாக, 55 பேர் இறந்தால்; 56 பேர் பிறக்கின்றனர். கொரோனா வந்ததால் இறப்பின் எண்ணிக்கை அதிகம் ஆகவில்லை. இந்த நோயால் வயதானவர்களும், ஏற்கனவே தீராத நோயில் இருந்தவர்களும்தான் இறந்துள்ளனர். இந்த நோய் காலத்தில் கெட்ட விஷயங்களை விட, பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. கொரோனாவில் இருந்து, நவீன மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளன. இதை அறிவியல்ரீதியாக ஆய்வு செய்து, இந்த நாவலை எழுதி கொண்டு இருக்கிறேன்,'' என்கிறார்.
இரு நாவல்களையும் படிக்க, வீ ஆர் வெயிட்டிங் ராஜேஷ்குமார் சார்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE