பீஹார் முதல்வராக நாளை பதவியேற்கிறார் நிதிஷ்

Updated : நவ 15, 2020 | Added : நவ 15, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
பாட்னா: பாட்னாவில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், பீஹார் முதல்வராக, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். அவர் நாளை (நவ.,16) பதவியேற்க உள்ளார்.பீஹார் சட்டசபை தேர்தலில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்த முதல்வர் மற்றும் பதவியேற்பு நாள் குறித்து,

பாட்னா: பாட்னாவில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், பீஹார் முதல்வராக, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். அவர் நாளை (நவ.,16) பதவியேற்க உள்ளார்.latest tamil newsபீஹார் சட்டசபை தேர்தலில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்த முதல்வர் மற்றும் பதவியேற்பு நாள் குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.


latest tamil newsதேர்தலுக்கு முன்ன தாகவே, கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ் குமார் முதல்வர் பொறுப்பேற்பார் என, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கூட்டணி விதிகளின் கீழ் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி , முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.


latest tamil news


.
பீஹாரின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா நாளை நடக்கும் என்பதால், அதற்கு முன், விதிமுறைப்படி, முதல்வர் நிதிஷ் குமார், தன் ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைப்பார் என, கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
15-நவ-202019:44:01 IST Report Abuse
Allah Daniel ///234 லட்சியம் 180 நிச்சயம் வெற்றி -மோடி சொன்னது/// சுடலை, தியமுக ஜெயிச்ச 'நகை கடன் ரத்து, ஆளுக்கு 2 ஏக்கர் நிலம், சாராய ஆலைகள் மூடுதல்'னு சொன்னியே செஞ்சியானு கேளு பாப்போம்...
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
15-நவ-202018:13:36 IST Report Abuse
வெகுளி தமிழகத்துக்கும் பீகாருக்கும் உள்ள நெடிய உறவை மதிக்கும் வகையில் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும்...
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
15-நவ-202020:58:52 IST Report Abuse
vadiveluநாடு என்றால் உன் குடுமபத்தையும் சேர்த்துதான், ஒருவன் தான் படும் கஷ்டம் இந்த நாடே படுவதாக நினைப்பதே பெரிய செயல். இப்படி உன் காலம் வரை புலம்பி தான் இருக்க வேண்டும்.எல்லாம் வல்ல உன் இறைவன் அதை கொடுக்கட்டும்....
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
15-நவ-202017:23:33 IST Report Abuse
Indhuindian BJP true to its word has made Nitish as the Chief Minister despite pathetic performance of his party. He had used very unpala words against Mr Modi and also insulted him by refusing to accept the donation of Rs. 10 Cr given by the Gujrat Government when Mr Modi was the Chief Minister of Gujarat. To appease the minority community he declined to accept Mr Modi as PM nominee in 2014 and quit NDA to ally with his staunch and sworn rival RJD. But BJP unmindful of these kept its part of the bargain. Now Nitish should take oath as CM and in the next few months or in about a year should step down to pave way for a BJP led Government after all uneasy lies the head with a crown of thorns
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X