பொது செய்தி

தமிழ்நாடு

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: அணைகளில் நீர்மட்டம் சரிவு

Added : நவ 15, 2020
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மழைக்கு, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை நான்கு முறை நிரம்பியது. தொடர்ந்து இங்குள்ள பி.ஏ.பி., அணைகள் அனைத்தும் நிரம்பின.இதனிடையே, வால்பாறையில் கடந்த சில நாட்களாக சாரல் மழையாக பெய்த வடகிழக்குப் பருவமழையும் தற்போது பெய்யாததால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும், பாசனத்துக்கு தண்ணீர்

வால்பாறை:வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மழைக்கு, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை நான்கு முறை நிரம்பியது. தொடர்ந்து இங்குள்ள பி.ஏ.பி., அணைகள் அனைத்தும் நிரம்பின.இதனிடையே, வால்பாறையில் கடந்த சில நாட்களாக சாரல் மழையாக பெய்த வடகிழக்குப் பருவமழையும் தற்போது பெய்யாததால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அணை நீர்மட்டசம் சரிந்து வருகிறது.சோலையாறு அணையின், நீர்மட்டம் நேற்று காலை, 154.81அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 272 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 512 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X