ஆனைமலை:ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் தீபாவளி விடுமுறை கொண்டாட்டத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள், தடுப்பணைகளில் அத்துமீறி குளித்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.ஆனைமலை அடுத்த ஆழியாறு பூங்கா, குரங்கு அருவிகளில், கொரோனா பாதிப்பு காரணமாக, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. இதனால், ஆனைமலை, ஆழியாறு, பொன்னாலம்மன்துறை பகுதி தடுப்பணைகள் மட்டுமே, சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கு இடமாக உள்ளது.இந்நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறையை கொண்டாட, சுற்றுலா பயணிகள் தடுப்பணைகளில் பெருங்கூட்டமாக திரண்டனர். ஆனைமலையில் ஆற்றுப்பாலத்தில் இருபக்கமும், ஆழியாறு - வால்பாறை ரோட்டிலும், நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், ஆனைமலை - உடுமலை, பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.அதேபோல், பொன்னாலம்மன்துறை தடுப்பணை பகுதிகளில், சுற்றுலா பயணிகள், ஆபத்தை உணராமல் ஆற்றில் குளித்தனர். தடுப்பணை பகுதிகளில் குறைந்த அளவிலான போலீசார் நியமிக்கப்பட்டது, பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு செய்யலாமல் அலட்சியமாக இருந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.வரும் நாட்களில், தடுப்பணை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் நுழைவதை தடுக்க, போலீசார், பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அப்போது தான், மகிழ்ச்சியான நாட்களில் அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE