பொது செய்தி

தமிழ்நாடு

காற்று வாங்கிய சினிமா தியேட்டர்கள்: உடல் வெப்பம் பரிசோதித்த பின் அனுமதி

Added : நவ 15, 2020
Share
Advertisement
அன்னூர்:அன்னூரில் ஏழு மாதங்களுக்குப் பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. எனினும் ரசிகர்கள் வருகை குறைவாகவே இருந்தது.கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் கடந்த மார்ச் 25ம் தேதி மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்தது.இதையடுத்து அன்னூரில் உள்ள

அன்னூர்:அன்னூரில் ஏழு மாதங்களுக்குப் பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. எனினும் ரசிகர்கள் வருகை குறைவாகவே இருந்தது.கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் கடந்த மார்ச் 25ம் தேதி மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து அன்னூரில் உள்ள இரண்டு சினிமா தியேட்டர்கள் கடந்த சில நாட்களாக தூய்மைப்படுத்தப்பட்டன. நேற்று முன்தினம் ஸ்ரீ கருணா திரையரங்கில் இரண்டாம் குத்து என்னும் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. அஷ்டலட்சுமி தியேட்டரில் பிஸ்கோத் என்னும் படம் திரையிடப்பட்டது.தியேட்டரில் ரசிகர்களை உள்ளே அனுமதிக்கும் முன்பு மாஸ்க் அணிந்து உள்ளனரா என பார்த்து, உடல் வெப்பம் பரிசோதித்து, சானிடைசரில் கைகளை தூய்மைப்படுத்திய பின்பே உள்ளே அனுமதித்தனர்.
ரசிகர்கள் ஒரு இருக்கை விட்டு, ஒரு இருக்கையில், அமரும்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிக அளவில் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்த்த தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.இரண்டு தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆகவில்லை. 'கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் வருகை குறைவாக இருந்தது. எனினும் ஓரிரு நாளில் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்' என, தியேட்டர் உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X