அன்னூர்:அன்னூர் அருகே ராக்கெட் பட்டாசு விழுந்ததால், பட்டு புழு வளர்ப்பு கொட்டகை தீயில் எரிந்து நாசமானது.குருக்கிளையம் பாளையத்தில், கிருஷ்ணன் என்பவர், 60 அடிக்கு 20 அடி நீள அகலமுள்ள ஓலைக் கொட்டகையில் பட்டுப்புழு வளர்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் அதிகாலை 1:00 மணிக்கு கொட்டகை திடீரென தீப்பிடித்தது. ஓலைக் கொட்டகை என்பதால் தீ மளமளவென பரவியது.அன்னூர் தீயணைப்பு துறையினர் வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும், 50 சதவீத கொட்டகையும், பட்டுப்புழு வளர்ப்புக்கான மர அலமாரிகளும் எரிந்து நாசமானது. 'சிலர் பட்டாசு வெடித்து, ராக்கெட் விட்டுக் கொண்டிருந்தனர். அதனுடைய தீப்பொறி ஓலைக் கொட்டகையில் பட்டிருக்கலாம்' என உரிமையாளர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE