பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவுக்கு தொடர்ந்து பஸ் இயக்கம்: அரசு அறிவிப்பால் மக்கள் நிம்மதி

Added : நவ 15, 2020
Share
Advertisement
அன்னூர்:'தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு தொடர்ந்து பஸ்கள் இயங்கும்' என்னும் அறிவிப்பால், அன்னூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்திலிருந்து, கர்நாடகாவுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் மார்ச் 25ம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. மூன்று மாதங்களுக்கு முன், தமிழகத்தில் நிபந்தனைகளுடன் பஸ்கள் இயக்கப்பட்ட போதும் கர்நாடகாவுக்கு பஸ்கள்

அன்னூர்:'தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு தொடர்ந்து பஸ்கள் இயங்கும்' என்னும் அறிவிப்பால், அன்னூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்திலிருந்து, கர்நாடகாவுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் மார்ச் 25ம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. மூன்று மாதங்களுக்கு முன், தமிழகத்தில் நிபந்தனைகளுடன் பஸ்கள் இயக்கப்பட்ட போதும் கர்நாடகாவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அன்னூர் பகுதியில் இருந்து, கர்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ் நகர், திரக்கனாம்பி பகுதிக்கு தொழில் மற்றும் வேலைக்கு செல்வோர் பாதிப்படைந்தனர்.இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, ஆறு நாட்களுக்கு, கர்நாடகாவுக்கு பஸ்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு, கடந்த நான்கு நாட்களாக கர்நாடகா அரசு பஸ்கள் சத்தி, அன்னூர் வழியாக கோவைக்கு இயங்கி வருகின்றன.இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், 'கர்நாடகாவுக்கு, பஸ் போக்குவரத்து 16 ம் தேதிக்கு பிறகும் தொடர்ந்து நடைபெறும்' என தெரிவித்துள்ளது. அரசின் அறிவிப்புக்கு, அன்னூரில் இருந்து கர்நாடகவுக்கு தொழில் மற்றும் வேலைக்கு செல்வோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X