கோவில்பாளையம்:காலிங்கராயன் குளத்தில், 43வது வாரமாக நேற்று களப்பணி நடந்தது.கொண்டையம் பாளையம் ஊராட்சியில் உள்ள காலிங்கராயன்குளம் 140 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தில், 12 அமைப்புகள் சேர்ந்து, கோவில்பாளையம் நீர் நிலை பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தி, சீரமைக்கும் பணி செய்து வருகின்றன. 43வது வாரமாக நேற்று, காலை தன்னார்வலர்கள் களப் பணியில் ஈடுபட்டனர்.குளத்தின் ஒரு பகுதியில், வேலி அமைக்கும் பணி நேற்று நடந்தது. இத்துடன் நடப்பட்ட மரக்கன்றுகள் கால்நடைகளால் பாதிக்காமலிருக்க, மர வளையங்கள் பொருத்தும் பணியும் நேற்று நடந்தது. இதையடுத்து அடர் வனம் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்ட பகுதியில் தண்ணீர் ஊற்றுதல், புதர்கள் அகற்றுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடந்தன.இப்பணியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த தன்னார்வலர்கள், விவசாயிகள், பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE