பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் வரும் வரை விசைத்தறிகளுக்கு ஓய்வு

Added : நவ 15, 2020
Share
Advertisement
சோமனூர்:தீபாவளி பண்டிகைக்கு தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால், விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.சூலூர், சோமனூர், கருமத்தம்பட்டி வட்டாரத்தில், லட்சக்கணக்கான விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் வெளிமாநில, வெளி மாவட்ட தொழிலாளர்கள் பல ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.தீபாவளி பண்டிகையை ஒட்டி, தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு,

சோமனூர்:தீபாவளி பண்டிகைக்கு தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால், விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.சூலூர், சோமனூர், கருமத்தம்பட்டி வட்டாரத்தில், லட்சக்கணக்கான விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் வெளிமாநில, வெளி மாவட்ட தொழிலாளர்கள் பல ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.தீபாவளி பண்டிகையை ஒட்டி, தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு, நான்கு நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு இரு நாட்களுக்கு முன் புறப்பட்டு சென்றனர். இதையடுத்து, ஓய்வில்லாமல் இயங்கி வந்த விசைத்தறிகளுக்கு ஓய்வு கிடைத்துள்ளது.விசைத்தறி உரிமையாளர்கள் கூறுகையில், ''தீபாவளி, பொங்கல் பண்டிகையை ஒட்டி, தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்வர். ஆண்டு முழுவதும் வேலை செய்யும் அவர்களுக்கு பண்டிகை காலங்களில் தான் ஓய்வு கிடைக்கும். தொழிலாளர்கள் மீண்டும் திரும்பி வந்த பிறகே விசைத்தறி கூடங்கள் முழுமையாக இயங்கத்துவங்கும். அதுவரை விசைத்தறிகளுக்கும் ஓய்வு தான்,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X