மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று, அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் வந்து செல்வது வழக்கம். விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர்.நீண்ட வரிசையில் நின்ற பக்தர்களை, கோவில் ஊழியர்கள் தெர்மல் ஸ்கேனர் வாயிலாக, உடலின் வெப்பநிலையை பரிசோதனை செய்தனர். கோவிலின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, கையில் கிருமி நாசினி மருந்து தெளித்து உள்ளே அனுப்பினர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கோவில் ஊழியர்கள், சமூக இடைவெளி விட்டு நிற்கும்படி, பக்தர்களுக்கு அறிவுரை கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE