நிறைவடையாத சாலை பணி: வாகனங்கள் சென்றுவர சிக்கல்

Added : நவ 15, 2020
Share
Advertisement
கோத்தகிரி:கோத்தகிரி காவிலோரை - சுண்டட்டி செல்லும் சாலை பணி நிறைவடையாததால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இப்பகுதியில் நீரோடை மேல் கட்டப்பட்டுள்ள பாலம், உயரம் இல்லாததால், மழை நாட்களில் பாலத்தின் மேல் தண்ணீர் ஓடுகிறது. 'பாலத்தை உயர்த்தி, சாலையை சீரமைக்க வேண்டும்,' என, அப்பகுதி மக்கள்வலியுறுத்தி வந்தனர்.அதன்படி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த சில

கோத்தகிரி:கோத்தகிரி காவிலோரை - சுண்டட்டி செல்லும் சாலை பணி நிறைவடையாததால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இப்பகுதியில் நீரோடை மேல் கட்டப்பட்டுள்ள பாலம், உயரம் இல்லாததால், மழை நாட்களில் பாலத்தின் மேல் தண்ணீர் ஓடுகிறது. 'பாலத்தை உயர்த்தி, சாலையை சீரமைக்க வேண்டும்,' என, அப்பகுதி மக்கள்வலியுறுத்தி வந்தனர்.அதன்படி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆமை வேகத்தில் நடக்கும் இப்பணியால், சாலையில் ஏற்பட்டுள்ள குழிகளில், தண்ணீர் தேங்கி, சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால், காவிலோரை வழியாக, சுண்டட்டி மற்றும் குருக்குத்தி உள்ளிட்ட கிராமங்களுக்கு வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேலும், நடந்து செல்லும் மக்கள், குறிப்பாக, விவசாயிகள் விளைப் பொருட்களை சுமந்து செல்லும்போது வழுக்கி விழும் நிலை உள்ளது.எனவே, சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X