கோவை:கவுமார மடாலயம், தண்டபாணி கடவுள் கோவிலில், பக்தர்களுக்கு காப்புக்கட்டுடன் லட்சார்ச்சனை கந்த சஷ்டித் திருவிழா நேற்று துவங்கியது.கவுமார மடாலயம், தண்டபாணி கடவுள் கோவிலில், 62ம் ஆண்டு லட்சார்ச்சனை கந்த சஷ்டி விழா, விரதம் இருக்கும் பக்தர்களுக்கு, காப்புக்கட்டுடன் நேற்று துவங்கியது. தொடர்ந்து, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில், இரு வேளை வேள்வி வழிபாடு, அர்ச்சனை பூஜை, பேரொளி வழிபாடு சிறப்பாக நடந்தது. ஆறு நாட்கள் நடக்கும் கோவில் நிகழ்ச்சிகள், www.facebook.com/kumaragurubaraswamigal/live என்ற, முகநுால் தளத்தில் நேரலை செய்யப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE