பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்பீடு போஸ்ட் கலக்கும் நேரத்தில் மதுக்கரையில் 'ஸ்லோ போஸ்ட்'

Added : நவ 15, 2020
Share
Advertisement
மதுக்கரை:மதுக்கரை போஸ்ட் ஆபீசில் நிலவும் தொழில்நுட்ப பிரச்னையால், மக்கள் அவதிப்படுகின்றனர்.மதுக்கரை போஸ்ட் ஆபீசில் இருந்து தினமும், தாலுகா, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், கோர்ட்டுக்கு வரும், தபால்கள் டெலிவரி செய்யப்படுகின்றன.பல ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இப்பணிகள் அனைத்தும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு,

மதுக்கரை:மதுக்கரை போஸ்ட் ஆபீசில் நிலவும் தொழில்நுட்ப பிரச்னையால், மக்கள் அவதிப்படுகின்றனர்.மதுக்கரை போஸ்ட் ஆபீசில் இருந்து தினமும், தாலுகா, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், கோர்ட்டுக்கு வரும், தபால்கள் டெலிவரி செய்யப்படுகின்றன.பல ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இப்பணிகள் அனைத்தும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு, மேற்கொள்ளப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக, அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறால், பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.உதாரணமாக, ஐந்து நிமிடங்களில் செய்ய வேண்டிய விபர பதிவை, 20 நிமிடங்கள் எடுத்து செய்ய வேண்டியுள்ளது. மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.குறிப்பாக, மேற்குறிப்பிட்ட அரசு அலுவலகங்களுக்கு காலை, 11:00 மணிக்குள் டெலிவரி செய்திருக்க வேண்டிய தபால்கள், மதியம், 2:00 மணியவில்தான் ஒப்படைக்கப்படுகின்றன. இதனால் அவர்களது பணிகளும் பாதிக்கப்படுகின்றன.தினசரி சேமிப்பு வரவு வைத்தல், டிபாசிட் பெறுதல், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பயனாளிகளை சேர்த்தல் போன்ற முக்கிய பணிகள், கடுமையாக பாதிக்கப்படுகிறது.தபால் துறையின் ஸ்பீடு போஸ்ட் சேவை உட்பட அனைத்து சேவைகளும், பாராட்டப்பட்டு வரும் நேரத்தில், மதுக்கரை போஸ்ட் ஆபிசின் 'ஸ்லோ போஸ்ட்' நிலைக்கு, உயரதிகாரிகள் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X