பொது செய்தி

தமிழ்நாடு

அப்பாடா...இப்பவாவது சினிமா பார்க்க வந்தாங்களே!

Added : நவ 15, 2020
Share
Advertisement
கோவை:கடந்த நான்கு நாட்களுக்கு பிறகு, தியேட்டர்களில் ஓரளவு கூட்டம் வந்ததால், தியேட்டர் உரிமையாளர்கள் ஆறுதல் அடைந்தனர்.கொரோனா வைரஸ் பரவல் காரணாமாக கடந்த, ஏழு மாதங்களாக மூடப்பட்ட தியேட்டர்கள் நவ., 10ல் திறக்கப்பட்டன. 50 சதவீத இருக்கைகளுடன் திறக்குமாறு தமிழக அரசு அறிவித்தது.இதன் படி, தீபாவளி பண்டிகையன்று, 'இரண்டாம் குத்து' சந்தானம் நடித்த 'பிஸ்கோத்', 'தட்றோம்

கோவை:கடந்த நான்கு நாட்களுக்கு பிறகு, தியேட்டர்களில் ஓரளவு கூட்டம் வந்ததால், தியேட்டர் உரிமையாளர்கள் ஆறுதல் அடைந்தனர்.கொரோனா வைரஸ் பரவல் காரணாமாக கடந்த, ஏழு மாதங்களாக மூடப்பட்ட தியேட்டர்கள் நவ., 10ல் திறக்கப்பட்டன. 50 சதவீத இருக்கைகளுடன் திறக்குமாறு தமிழக அரசு அறிவித்தது.இதன் படி, தீபாவளி பண்டிகையன்று, 'இரண்டாம் குத்து' சந்தானம் நடித்த 'பிஸ்கோத்', 'தட்றோம் துாக்றோம்' என, மூன்று படங்கள் திரைக்கு வந்தன.முன்னரே திரையிடப்பட்ட 'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தல்', 'ஓ மை கடவுளே', 'தாராள பிரபு' மற்றும் கொரியன் மூவி என, நான்கு படங்கள் திரையிடப்பட்டன.நீண்ட நாட்களுக்கு பிறகு, புது படங்கள் ரிலீஸ் ஆகியும், மக்கள் மத்தியில் வரவேற்பு குறைவாகவே இருந்தது. நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஓரளவுக்கு மக்கள் திரைப்படங்களை பார்த்து 'ரிலாக்ஸ்' ஆகினர்.தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,'பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியாகாததால், மக்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக இருந்தது. கடந்த நான்கு நாட்களை விட நேற்று, ஓரளவு மக்கள் திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்தனர்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X