அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணி குறித்து தலைவர், நிர்வாகிகளுடன் ஆலோசனை: 21ல் சென்னை வருகிறார் அமித்ஷா

Updated : நவ 16, 2020 | Added : நவ 15, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
தமிழகத்தில், தேர்தல் கூட்டணி குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முடிவு செய்துள்ளார். இதற்காக, வரும், 21ம் தேதி, அவர் சென்னை வருகிறார். சென்னையில் அவரை, முதல்வர் பழனிசாமி , துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரும் சந்தித்துப் பேச உள்ளனர். தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில், விரைவில் சட்டசபை பொதுத்தேர்தல்
அமித்ஷா, பாஜ, பா.ஜ., சென்னை, முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம், ரஜினி,  முருகன்

தமிழகத்தில், தேர்தல் கூட்டணி குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முடிவு செய்துள்ளார். இதற்காக, வரும், 21ம் தேதி, அவர் சென்னை வருகிறார். சென்னையில் அவரை, முதல்வர் பழனிசாமி , துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரும் சந்தித்துப் பேச உள்ளனர்.

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில், விரைவில் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. பீஹார் சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பா.ஜ., தலைமையின் கவனம், மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் மீது திரும்பியுள்ளது.தமிழகத்தில், 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இடம் பெற்றது. இக்கூட்டணி, ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

வரும் சட்டசபை தேர்தலில், அதிக இடங்களில், வெற்றி பெற்றாக வேண்டும் என்ற துடிப்புடன், பா.ஜ., தலைமை உள்ளது. அதற்கான பணிகளை, ஏற்கனவே துவக்கி உள்ளது. அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும், முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாதம்தோறும் மாவட்டங்களில், நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு, தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

தேர்தலை ஒட்டி, தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில், தடையை மீறி, மாநில பா.ஜ., தலைவர் முருகன் தலைமையில், வேல் யாத்திரை நடத்தப்படுகிறது. மாற்று கட்சியினரை, கட்சியில் இணைக்கும் பணியும், வேகமாக நடந்து வருகிறது. திராவிட கட்சிகள் பாணியில், தேர்தல் பணிகளை, பா.ஜ., துவக்கி உள்ளது.

வேல் யாத்திரைக்கு, தமிழக அரசு அனுமதி அளிக்காதது; யாத்திரையில் பங்கேற்க சென்றவர்கள் கைது போன்ற காரணங்களால், அ.தி.மு.க.,விற்கும், பா.ஜ.,விற்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., நீடிக்குமா என்ற சந்தேகம், அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், அரசியல் கூட்டணியை முடிவு செய்யவும், தேர்தல் பணிகளை துவக்கவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும், 21ம் தேதி, சென்னை வர உள்ளார். சென்னை வரும் அவர், கவர்னர் மாளிகையில் தங்குகிறார். அன்றைய தினம், கலைவாணர் அரங்கில் நடக்க உள்ள, அரசு விழாவில் பங்கேற்கிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை என்ற, இரு ஏரிகளை இணைத்து, 380 கோடி ரூபாயில், புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணி, 2013ல் துவக்கப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளது.இந்த நீர்தேக்கத்தை, நாட்டு மக்களுக்கு, 21ம் தேதி விழாவில், அமித்ஷா அர்ப்பணிக்க உள்ளார்.அத்துடன் பல்வேறு திட்டங்களுக்கும்,அடிக்கல் நாட்ட உள்ளார்.

அதன்பின், பா.ஜ., மாநில நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். அப்போது, சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டிய பணிகள் குறித்து,கட்சியினருக்கு அறிவுரைகள் வழங்க உள்ளார்.சென்னை வரும் அமித்ஷாவை, முதல்வர்பழனிசாமி - துணை முதல்வர் பன்னீர்செல்வம்., சந்தித்து பேச உள்ளனர். அப்போது, கூட்டணியில் தற்போது காணப்படும் புகைச்சல்கள் களையப்பட்டு, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி உறுதி செய்யப்படும் என, தெரிகிறது.


ரஜினியுடன் அமித் ஷா சந்திப்பு?வரும், 21ம் தேதி, சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகர் ரஜினியை, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசுகிகிறார்.ஏற்கனவே, 'ரஜினியின் முடிவுக்காக காத்திருக்கிறோம்' என, அமித் ஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமித்ஷாவின் கூட்டணி திட்டம் குறித்து, ரஜினிக்கு அவரது நண்பரான மத்திய அமைச்சர், நிதின் கட்கரி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, ரஜினி - அமித் ஷா சந்திப்பு நடக்கிறது. இதுவரையில், ரஜினியும்,
அமித் ஷாவும் நேரடியாக சந்தித்து பேசியதில்லை; தொலைபேசி வாயிலாக பேசி உள்ளனர்.
இதற்கிடையில், தன்னுடைய உடல் நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு, தீபாவளி அன்று, ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தீபாவளி பட்டாசு வெடிக்கும் அளவுக்கு, தன் உடல் நிலை நன்றாக இருப்பதை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், ரசிகர்களை சந்தித்து, அவர்களிடம்
உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளார்.


யாத்திரையில் பங்கேற்பாரா?

''மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விற்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்க உள்ளோம். அவர், யாத்திரையில் பங்கேற்க வாய்ப்பில்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:

சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பா.ஜ., சார்பில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, அரசு நிகழ்ச்சியில், அவர் பங்கேற்கும் இடம் வரை, சமூக இடைவெளியுடன், சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளோம். அரசு விழா முடிந்ததும், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மற்றும் உயர் மட்ட கூட்டத்தில், அமித் ஷா பங்கேற்க
உள்ளார். அமித் ஷா வருகை, எங்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக இருக்கும். வெற்றிவேல் யாத்திரையில், அமித் ஷா பங்கேற்க வாய்ப்பில்லை. அமித் ஷா வருகை, எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு, முருகன் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
16-நவ-202021:02:05 IST Report Abuse
K.n. Dhasarathan அமித் சவால் ஒரு புல்லை கூட புடுங்க முடியாது ஏற்கனவே ஜோக்கர் முருகனுக்கு கூட்டத்திற்கு ஆள் சேர வில்லை , இருக்கும் கூட்டத்தை வைத்து ஒவ்வொரு கோயில் குளத்தை சுத்தப்படுத்தினால் ஜனங்களாவது சந்தோசைபடுவாங்க, சும்மா வெறுமே யாத்திரை என்றால் அரசும் மக்களும் கோபப்படுவது நியாயம்தானே முருகா ?
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
16-நவ-202020:17:17 IST Report Abuse
தமிழ்வேள் சொரியான் கருணா அண்ணா கூட்டத்தை என்று குழி தோண்டி புதியக்கப் போகிறீர்கள் அமிஷ் ஷா ஜி அவர்களே? அந்த திருநாளுக்காக தமிழகம் ஏங்குகிறது. என்பதாண்டுகளுக்கு மேலாக அழுகி நாறி நொதித்துப்போன விஷக்கூட்டம் இந்த திராவிட திருட்டுக் கூட்டம் ..கூடியவிரைவில் வேர் மூலம் இன்றி இந்த கூட்டத்துக்கு சமாதி கட்டுங்கள் ப்ளீஸ் ...
Rate this:
Cancel
Svs yaadum oore - chennai,இந்தியா
16-நவ-202017:13:20 IST Report Abuse
Svs yaadum oore அவனவன் நேரம் செலவு செய்து மெனக்கெட்டு இங்கே பதிவு செய்தால் சும்மா நோட்டா நோட்டா என்று எந்நேரமும் எழுதிக்கிட்டு …..பெரிய மாற்றம் ஒன்றும் நாளைக்கே வராது ….. நோட்டா கண்டினியூ ஆனால் ஒன்றும் பிரச்சனை இல்லை ….வெட்டியாகவா இங்கே எழுதறாங்க? …..
Rate this:
16-நவ-202019:42:25 IST Report Abuse
பாமரன்உங்க கோவம் ஞாயம்தான். நீங்க ...அதாவது நீங்க போக விரும்பும் இடமும் ஞாயம்தான். ஆனால் தேர்ந்தெடுத்த பாதைதான்!? வெறுமனே டீம்காவை திட்டறதாலோ அல்லது ஒரு நமக்கு அரியனை தரலைன்னு தமிழனை பொதுவாக சாபம் விடறதாலோ ஒன்னியும் சாதிக்க முடியாது. ஆக்கப்பூர்வமான அப்ரோச்ல இந்த ஜனங்களை புரிஞ்சுக்க முயற்சி செய்து அவிங்க லெவலுக்கு திங்க் பண்ணி பயணித்தால் இலக்கு அடைய முடியும்....
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
16-நவ-202021:07:47 IST Report Abuse
elakkumananபாக்கெட் சாராயம், ஓட்டுக்கு இருபது ரூவாய், திருமங்கலம், கலைகார் டிவி, ரெண்டு ஏக்கர் இலவச இடம், சொந்த நாட்டுக்கு எதிராக கூவுறது, இந்து மதத்தை திருடன் னு சொல்றது, தமிழ் காட்டான் பாஷை, உதயநிதி அடுத்த முதல்வர்...நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த அரசை நிர்பந்திக்காமல், காசு பெட்டியோடு ஊர் ஊரா ரெண்டு மாசம் அலைஞ்சு திரியுறது, இலவசம் கொடுப்போம்னு சொல்லி பழக்கிவிட்டது, கல்வியை தரை மட்டம் ஆகியது, நவோதயா பள்ளிகளை தடுத்தது, நோம்பு காஞ்சி குடிச்சுட்டு, விநாயகர் சதுர்த்திக்கு நெற்றியில் என்ன ரத்தமா னு கேக்குறது...........இதெல்லாம் உங்கள் கட்சியின் ஆக்கபூர்வமான அப்ரோச்சா சார்........பேரு சரியாதான் இருக்கு...நன்றி......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X