பொது செய்தி

தமிழ்நாடு

முகவரி எதுவாக இருந்தாலும் சேமிப்பு கணக்கு துவக்கலாம்

Added : நவ 15, 2020
Share
Advertisement
கோவை:வேறு மாநில முகவரியைக் காரணம் காட்டி, தேசிய சேமிப்பு கணக்கு துவங்க, தபால் நிலையங்கள் மறுக்க கூடாது என, தபால் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தபால்துறையில் சேமிப்பு கணக்கு மற்றும் செல்வ மகள் திட்டம், தொடர் வைப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம் என 9 வகை சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேமிப்பு திட்டங்களை, எந்த

கோவை:வேறு மாநில முகவரியைக் காரணம் காட்டி, தேசிய சேமிப்பு கணக்கு துவங்க, தபால் நிலையங்கள் மறுக்க கூடாது என, தபால் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தபால்துறையில் சேமிப்பு கணக்கு மற்றும் செல்வ மகள் திட்டம், தொடர் வைப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம் என 9 வகை சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேமிப்பு திட்டங்களை, எந்த தபால்நிலையிலும் துவக்கலாம்.ஆனால், சில தபால்நிலையங்கள், ஆவணங்களில் வேறு மாநில முகவரி இருப்பதை காரணம் காட்டி, தேசிய சேமிப்பு கணக்குகளை துவங்க, வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கின்றனர். இதுதொடர்பாக, தபால் இயக்குனரகத்திற்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார்கள் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், 'அந்தந்த மாநிலத்தில்தான் வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும் என எந்த விதிகளுமில்லை. 'ஆகவே, ஆதார் மற்றும் அதிகாரப்பபூர்வ ஆவணங்களில், வேறு மாநிலம் அல்லது நகர முகவரிகள் இருந்தாலும், சேமிப்பு கணக்கு துவங்க வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும்' என தபால்நிலையங்களுக்கு, தபால் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X