தமிழ்நாடு

மறுபடியும்! ரயில் பயணங்களில் பழைய நிலை:கொரோனா பரவல் தடுப்பும் தீவிரம்

Updated : நவ 16, 2020 | Added : நவ 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:கோவை உட்பட சேலம் ரயில்வே கோட்டத்தில் பயணிகள் எண்ணிக்கை பழையபடி அதிகரித்து வருவதால், கொரோனா பரவல் தடுப்பு திட்டங்களை, தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பு ஆரம்பகட்டத்தில், பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டு, அத்தியாவசிய போக்குவரத்துக்கான சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. ஊரடங்கு தளர்வு காரணமாக, தற்போது சிறப்பு ரயில்கள் மட்டும்
 மறுபடியும்! ரயில் பயணங்களில் பழைய நிலை:கொரோனா பரவல் தடுப்பும் தீவிரம்

கோவை:கோவை உட்பட சேலம் ரயில்வே கோட்டத்தில் பயணிகள் எண்ணிக்கை பழையபடி அதிகரித்து வருவதால், கொரோனா பரவல் தடுப்பு திட்டங்களை, தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பு ஆரம்பகட்டத்தில், பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டு, அத்தியாவசிய போக்குவரத்துக்கான சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. ஊரடங்கு தளர்வு காரணமாக, தற்போது சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
கோவையில் இருந்து சென்னை, மயிலாடுதுறைக்கும், கோவை வழியாக எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களுக்கும், எட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில், 90 சதவீதம் முன்பதிவு என, பயணிகள் எண்ணிக்கை பழைய நிலையை அடைந்து வருகிறது.சேலம் கோட்டம் உட்பட, தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும், 103 சிறப்பு ரயில்களில், கடந்த அக்., மாதம், 20.66 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
பயணிகள் எண்ணிக்கை பழைய நிலையை எட்டிவரும் அதே சமயம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதில், ரயில்வே நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ''கோவையில் இருந்தும், கோவை வழியாகவும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் என, சேலம் கோட்டத்தில் பெரும்பாலான ரயில்களில், 80 முதல், 90 சதவீத இருக்கைகள் நிரம்பி வருகின்றன.
இதையடுத்து, கூடுதல் ரயில்கள் இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயணிகள் அதிகரித்து வருவதால், நோய் பரவலை கட்டுப்படுத்த, ரயில்களிலும், ஸ்டேஷன்களிலும் கிருமிநாசினி தெளித்து, சுத்தமாக வைப்பதுடன், தானியங்கி தொழில் நுட்பங்களை பயன்படுத்தவும் முயற்சித்து வருகிறோம். ''மாஸ்க் அணிதல் உள்ளிட்ட, நோய் தடுப்பு வழிமுறைகளை, கடை பிடிக்காத பயணிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-நவ-202014:11:53 IST Report Abuse
ஆப்பு சிறப்பு ரயில்ங்கற பெயரில் அதிகமா காசு உருவிடறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X