வடவள்ளி:கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சுப்ரமணிய சுவாமிக்கு, பால், நெய், சந்தனம், தேன், தயிர் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்கள் கொண்டு, அபிஷேகம் செய்யப்பட்டது.காலை, 6:00 மணிக்கு, சுப்ரமணியசுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை, 8:00 மணிக்கு, யாகசாலை பூஜை, புண்யாகம் செய்யப்பட்டு, இறை அனுமதி பெறும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து, அரோகரா கோஷத்துடன், முருகனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, ஒரு வேளை உணவு உண்டு, விரதம் இருக்கும் பக்தர்கள், நேற்று காப்பு கட்டி சென்றனர். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் வரும், 20ம் தேதி, பகல், 3:00 மணிக்கும், திருக்கல்யாணம், 21ம் தேதி, காலை, 7:00 மணிக்கும் நடக்கிறது.வார விடுமுறை தினம் என்பதாலும், கந்தசஷ்டி விழாவின் முதல் நாள் என்பதாலும், நேற்று மருதமலையில் ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசிக்க வருகை தந்தனர். அடிவாரத்தில் பக்தர்களின் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE