பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சி ரோட்டில் நடக்க முடியவில்லை: சாலையோர ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி

Added : நவ 15, 2020
Share
Advertisement
சாக்கடை கால்வாயை துார்வாரணும்வேடபட்டி பிரதான சாலையில், பேரூராட்சி அலுவலகம் எதிரில், சாக்கடை கால்வாய் முழுவதும் செடிகள் முளைத்து, அடைப்பு ஏற்பட்டுள்ளது. இக்கால்வாயை துார்வாரி, கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.- ஞானி, வேடபட்டி.பாதசாரிகள் அவதிதிருச்சி ரோடு, ராமநாதபுரத்தில், மேம்பால பணி நடந்து வரும் நிலையில், மேக்ஸ் ேஷாரூம் அருகில், நடைபாதையும் பயனற்ற

சாக்கடை கால்வாயை துார்வாரணும்வேடபட்டி பிரதான சாலையில், பேரூராட்சி அலுவலகம் எதிரில், சாக்கடை கால்வாய் முழுவதும் செடிகள் முளைத்து, அடைப்பு ஏற்பட்டுள்ளது. இக்கால்வாயை துார்வாரி, கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.- ஞானி, வேடபட்டி.

பாதசாரிகள் அவதிதிருச்சி ரோடு, ராமநாதபுரத்தில், மேம்பால பணி நடந்து வரும் நிலையில், மேக்ஸ் ேஷாரூம் அருகில், நடைபாதையும் பயனற்ற பொருட்களால், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.- பாலமுருகன், ராமநாதபுரம்.

சாக்கடை கால்வாய் அடைப்புபாலக்காடு ரோடு, சுகுணாபுரம், ரெயின்போ காலனியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- தமீம், ரெயின்போ காலனி.

சாலை வசதியில்லைமாநகராட்சி, 35வது வார்டுக்கு உட்பட்ட, கோல்டுவின்ஸ், பூம்புகார் நகரில், சாலை வசதி இல்லாததால், மழை நேரங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.-நந்திவர்மா, கோல்டுவின்ஸ்.

போக்குவரத்துக்கு இடையூறுசத்திரோடு, ஜி.பி.சிக்னலில் இருந்து, ராமகிருஷ்ணா மருத்துவமனை சிக்னல் வரை, சாலையின் இருபுறமும், வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- முருகவேல், ரெட்பீல்டு.

கழிவு நீர் தேக்கம் பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.எஸ்.நகர் சாக்கடை கால்வாய் முழுவதும், குப்பையால் அடைபட்டுள்ளது. கழிவுநீர் செல்ல வழியின்றி, வீடுகள் முன், தேங்கியுள்ளது.- பாரதி, பாப்பநாயக்கன்பாளையம்.

வி.சி.எஸ். நகரில் சுகாதார சீர்கேடுமேட்டுப்பாளையம் ரோடு, வெள்ளக்கிணர் பிரிவு, வி.சி.எஸ்.நகர், நான்காவது வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- முத்துசாமி, வி.சி.எஸ். நகர்.

விளக்கு எரிவதில்லைவெள்ளக்கிணர், அண்ணா வீதியில், மூன்று வீதிகள் சந்திப்பில் உள்ள, மின் கம்பத்தில், விளக்கு எரிவதில்லை.- கவுதமி, வெள்ளக்கிணர்.

குண்டும் குழியுமான ரோடுமாநகராட்சி, ஆறாவது வார்டுக்கு உட்பட்ட, தடாகம் ரோடு, டி.வி.எஸ்., நகரில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- தியாகராஜன், டி.வி.எஸ்.,நகர்.

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட, துடியலுார், அன்பு நகர் முதல் வீதியில் உள்ள, மின் கம்பத்தில், கடந்த சில மாதங்களாக விளக்கு எரிவதில்லை.- பாலு, அன்பு நகர்.

குடிநீரில் கலக்குது கழிவுநீர்மாநகராட்சி, 97வது வார்டுக்கு உட்பட்ட, கருப்பராயன் கோவில் வீதியில், குடிநீர் கேட்வால்வு குழாய், கழிவுநீரால் சூழப்பட்டுள்ளது; குடிநீர் துர்நாற்றம் வீசுகிறது.- பரமசிவம், கருப்பராயன் கோவில் வீதி.

தார் சாலை அமைக்கணும்மாநகராட்சி, 93வது வார்டுக்கு உட்பட்ட, குனியமுத்துார், அன்னமநாயக்கர் வீதி, கிராண்ட் கேப்பிட்டல் பர்னிச்சர்ஸ் எதிரில், தார் சாலை வசதி இல்லாததால், மழை நேரங்களில், இங்குள்ள மண் சாலை, சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.- ஜலீல், குனியமுத்துார்.

சாக்கடை கால்வாய் வசதியில்லைசுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் அருகே அன்னை இந்திரா நகர், முதல் மற்றும் இரண்டாவது வீதிகளில், சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது.- ஆறுச்சாமி, அன்னை இந்திரா நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X