கருத்துக் கணிப்பை நம்பாத லாலு!

Updated : நவ 17, 2020 | Added : நவ 15, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
பீஹார் சட்டசபை தேர்தல் இறுதிக் கட்ட ஓட்டுப் பதிவு முடிந்ததும், அனைத்து கருத்துக் கணிப்புகளும், 'லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடையும். தேஜஸ்வி முதல்வராவார்' என, அறிவித்தன.ராஞ்சியில் சிறையில் உள்ள லாலுவிற்கு இந்த விஷயம் தெரிந்ததும், அதிர்ச்சிஅடைந்தாராம். 'நமக்கு எப்படி, 150 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என கணிப்பு சொல்கிறது...
கருத்துக் கணிப்பு, லாலு, லாலுபிரசாத், தேஜஸ்வி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆர்ஜேடி,

பீஹார் சட்டசபை தேர்தல் இறுதிக் கட்ட ஓட்டுப் பதிவு முடிந்ததும், அனைத்து கருத்துக் கணிப்புகளும், 'லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடையும். தேஜஸ்வி முதல்வராவார்' என, அறிவித்தன.

ராஞ்சியில் சிறையில் உள்ள லாலுவிற்கு இந்த விஷயம் தெரிந்ததும், அதிர்ச்சிஅடைந்தாராம். 'நமக்கு எப்படி, 150 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என கணிப்பு சொல்கிறது... நம்ப முடிய வில்லையே. யாதவ் மற்றும் சிறுபான்மையினர் மட்டுமே, நம் ஓட்டு வங்கி. 'மற்ற ஜாதி ஓட்டுகள் நமக்கு கிடைக்காது. அப்படியிருக்கும்போது, எப்படி இவ்வளவு சீட் நமக்கு கிடைக்கும்' என, கட்சி தலைவர்களிடம் கேட்டுள்ளார், லாலு.

'ஆளும் கட்சிக்கு ஆதரவான, 'ரிபப்ளிக் டிவி' யில் கூட, தேஜஸ்வி கூட்டணி தான், 160க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெறும் என சொல்கிறது'. இதைக் கேட்டு சிரித்த லாலு, 'அர்னாப் கோஸ்வாமி ஜெயிலுக்கு போனதால், அந்த சேனல், பா.ஜ.,வுக்கு எதிராகி விட்டதா' என, சிரித்துள்ளார். இதற்கிடையே கருத்துக் கணிப்பை கேட்டதும், காங்., தங்கள் சீனியர் தலைவர்களை பாட்னாவிற்கு அனுப்பியது. 'எங்கள், எம்.எல்.ஏ.,க்களை யாரும் விலைபேசாமல் இருப்பதற்காக, மூத்த தலைவர்கள் இங்கு வந்துள்ளனர்' என, உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் கூறினர்.

ஆனால் தேர்தல் முடிவுகள், கருத்துக் கணிப்பு ஒரு பொழுதுபோக்கு என்பதை மீண்டும் நிரூபித்தன. பீஹாரில், கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தனியாக போட்டியிட்டது. கருத்து கணிப்பில் பா.ஜ., ஆட்சியைப் பிடிக்கும் என அனைத்து சேனல்களும் கூறின.கடைசியில் அது பொய் ஆனது. நிதிஷ் குமார் அப்போது, லாலுவுடன் கூட்டணி யில் இருந்தார். அவர்தான் வென்றார். எனவே, 'இந்த கருத்துக் கணிப்பு வெறும் கருத்து திணிப்பு தான்' என, பா.ஜ., வினர் கிண்டலடிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
17-நவ-202007:09:01 IST Report Abuse
Matt P இவனுகளுக்கு எல்ல்லாம் வூழ்ல் தான் அதிக நம்பிக்கை. கருத்து கணிப்புகள் எல்லாம் நம்புமபடியாக இருந்தாலும் தில்லு முல்லுகள் செய்து கருத்துக்கணிப்புகளையே மாற்றிக்காட்டும் திருட்டு திறன் படைத்தவர்கள்.
Rate this:
Cancel
pazhaniappan - chennai,இந்தியா
16-நவ-202016:52:47 IST Report Abuse
pazhaniappan அப்பா இப்படியெல்லாம் கூட இருக்குமா ? தமிழக்த்தில் ஒரு சீட்டு கூட வாங்க இயலாத பாஜக தங்கள் தயவில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று நம்பிக்கையோடு கூறுவார்கள் , அதை மக்களும் நம்புவார்கள் , கடந்த முறையே கூட்டணியோடு வெற்றிபெற்று , பின்பு சூட்சியால் பலமான எதிர் காட்சிவரிசையில் இருந்த கட்சி தற்போது பீகாரின் தனிப்பெரும் கட்சியாக இருக்கிற கட்சியின் மீது அந்த தலைவருக்கே நம்பிக்கையில்லையாம் , என்னங்கய்யா கலர் காலரா ரீல் விடறீங்க ,
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
16-நவ-202013:13:20 IST Report Abuse
sridhar முப்பது வருஷமா நக்கீரன் கருத்து கணிப்பு , திமுக நூத்தி ஐம்பதுக்கு மேல். அந்த ஆளுக்கு வெட்கமெல்லாம் கிடையாது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X